அடித்து ஆடும் உளவுத்துறை !
மாநகர காவல் துறையின் உளவுத்துறைக்கென்று ஒரு ஒப்பற்ற பாரம்பரியம் இருக்கிறது. IS இன் தலைமை பொறுப்பை ஏற்கும் அதிகாரியின் திறமைகளை பொறுத்தே கமிஷ்னரின் பதவி காலம் கணிக்கப்படும். கமிஷனர்கள் எப்பேற்பட்ட சூராதி சூரர்களாக இருந்தாலும் சரி , தனது வலதுகரமாக விளங்கும் விசுவாசமான , விவரமான, திறமையான உளவுத்துறை அதிகாரி கிடைக்காமல் போனால் ஏதாவது ஒரு சர்ச்சைக்குள் சிக்கி , கவிழ்ந்த தலையோடு தான் இந்த கமிஷ்னரேட்டை விட்டு வெளியேற வேண்டும்.
மாநகர காவல் துறையின் உளவுப் பிரிவில், இன்று தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள ஒருவரை குறித்து தான் என்று விமர்சனங்கள் வரிசை கட்டி நிற்கிறது. உளவுத்துறையில் முன் பின் அனுபவம் அற்றவர். ஒற்றுப் பணியின் நெளிவு சுளிவுகளை சுத்தமாக அறிந்திராதவர். அப்பேற்பட்ட ஒருவரை கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அதிரடியில் IS யின் அரியணையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

IS சின் அந்த சர்ச்சைக்குள்ளான சர்வாதிகாரியின் பெயர் சந்தோஷ் ஹதிமானி. மிகவும் சாந்தமானவர் , கூடவே கைசுத்தமானவர். 2011 ஆம் வருடநேரடி ஐபிஎஸ் அதிகாரி. காஞ்சிபுரம் , புதுக்கோட்டை என்று SP யாக வலம் வந்தவர். சிட்டி போலீசிலும் சில காலம் துணை கமிஷனாக இருந்திருக்கிறார். சேலம் சரக DIG யாகவும் நெல்லையின் 48வது கமிஷ்னராகவும் இருந்தவர் சந்தோஷ்.
குறளரசன் திருநாவுக்கரசு , விவேகத்தின் மறுபெயரான விமலா போன்றவர்கள் உளவுத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள். இருந்தும் இவர்களை எல்லாம் புறந்தள்ளி , எந்த நோக்கத்திற்காக சந்தோஷ் ஹதிமானியை சலனமே தெரியாமல் சிட்டி போலீசுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் ? அதன் பின்னணி தான் எங்களுக்கு புரியாத புதிராக , சிதம்பர ரகசியமாக இருக்கிறது என்கிறது சிட்டி IS.
எல்லாம் தமிழக உளவுத்துறையின் தானை தலைவராக , முதல்வரின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான அந்த உயர்ந்த மனிதனின் ஆலோசனை தான் , இந்த அதிரடி மாற்றத்திற்கு மூல காரணம் என்பதும் உளவுத்துறை ஒற்றர்களே.
அதேபோல ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, உயர்ந்த சிந்தனைக்காரர் டேவிட்சனுக்கு உரிய அங்கீகாரத்தை அள்ளிக் கொடுக்க , அவரது சிஷ்யரும் சீரியஸாக களத்தில் இறங்கி இருக்கிறார்.
இந்தக் கூட்டணியில் பிரபலமான ஜூனியர் என்று அழைக்கப்படும் ஒரு சீனியர் புலனாய்வு பத்திரிகையின் நிருபருக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. இது போன்ற தரமான கூட்டணிக்கு தோள் கொடுப்பது கைவந்த ” கலை ” அவருக்கு. காவல்துறையில் கிரிமினல் அதிகாரிகளை களையெடுப்பதில் முதல்வருக்கு வலதுகரமாக விளங்குபவரும் இந்த சீனியர் IPS அதிகாரியே என்கிறது காவல்துறை தலைமையகம்.
இந்திரஜித்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.