இலவச சட்ட உதவி … இளம் வழக்கறிஞர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ் !
தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கும் வழக்கறிஞர்களுக்கு (Legal Aid Panel Lawyers) சம்பளத்தை உயர்த்தி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் நீதிபதி S.M.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
- ஏழை மக்கள் திறமையான வழக்கறிஞர்களின் மூலம் இலவசமாகவும், திறமையாகவும் சட்ட உதவி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.
- புதிய கட்டண விகிதம் 1.10.2026 முதல் அமலுக்கு வருகிறது.
- 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில், பல்வேறு சட்டத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, அதிக அனுபவம் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து புதிய பேனலுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும்.
- அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு இதை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய கட்டண உயர்வு விவரம் (ANNEXURE):
*I. நீதிமன்றம் சாராத பணிகள்:
– கவுன்சிலிங் பணி (ஒரு நாளைக்கு): ‘A’ பேனல் – ரூ.400-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு. ‘B’ பேனல் / ஓய்வு பெற்ற நீதிபதிகள் – ரூ.800-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்வு.
– கருத்து தெரிவித்தல் (ஒரு வழக்குக்கு): ‘A’ பேனல் – ரூ.1,000, ‘B’ பேனல் – ரூ.1,500
– சிறைச்சாலை பார்வையிடல்: ரூ.400-ல் இருந்து ரூ.1,000
– சட்ட விழிப்புணர்வு முகாம்கள்: ‘A’ பேனல் – ரூ.1,000, ‘B’ பேனல் – ரூ.2,000
– அரசு அலுவலகத்தில் மனுதாரர் சார்பாக ஆஜராதல்: தாலுகாவுக்குள் – ரூ.1,500, தாலுகாவுக்கு வெளியே – ரூ.2,000 (போக்குவரத்து செலவு உட்பட)
- குடும்ப நீதிமன்ற வழக்குகள்:
– முழு விசாரணைக்கு பிறகு: ரூ.3000-ல் இருந்து ரூ.5,000
– ஆவணங்கள் தயாரித்தல்: ரூ.2,500
– ex-parte தீர்ப்பை ரத்து செய்ய மனு: ரூ.1,000
*III. மாவட்ட கிரிமினல் வழக்குகள்:
– CMM/CJM நீதிமன்ற வழக்குகள்: ரூ.6000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்வு
– குற்றவியல் மேல்முறையீடு: ரூ.6000-ல் இருந்து ரூ.15,000
– Referred Trials: ரூ.7500-ல் இருந்து ரூ.20,000
- மற்றவை:
– தட்டச்சு (ஆங்கிலம்) – ஒரு பக்கத்திற்கு ரூ.20-ல் இருந்து ரூ.40
– தட்டச்சு (தமிழ்) – ரூ.25-ல் இருந்து ரூ.50
– மொழிபெயர்ப்பு (தமிழ்-ஆங்கிலம்) – ஒரு A4 பக்கத்திற்கு ரூ.150
இந்த உத்தரவு மூலம் இளம் வழக்கறிஞர்கள் அதிக அளவில் சட்ட உதவி பணிகளில் ஈடுபடுவார்கள், ஏழை மக்களுக்கு தரமான நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.