ஒன்றோடு ஒன்றானால் விஷமாகும் உணவுகள் !

அட இது தெரியாம போச்சே – பாகம் 27

உணவே மருந்து என்பது நாம் அறிந்த பழமொழி. ஆனால், உணவே நஞ்சாகவும் மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா? வேறு வேறாய் இருக்கும் இரண்டு மருத்துவ குணம் கொண்ட உணவு பொருளும் கூட ஒன்றோடு ஒன்றாக கலந்தால் நஞ்சாய் மாறும். அப்படி எந்தெந்த இரண்டு உணவுகள் ஒன்றானால் விஷமாகும் என்று பார்க்கலாம்.

தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.

வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது.

பழங்களை சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது.

வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.

நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

பேரா சா. அருள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.