முதலில் புகார் கொடுத்தது யார்? உடைக்கும் உறுப்பினர் ரங்கராஜ்
கலைமகள் சபாவின் நிர்வாகம், சொத்துகள் மற்றும் 1999-ல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோவையைச் சேர்ந்த சபா உறுப்பினர் ரங்கராஜன் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவின் கீழ் செயல்பட்ட கலைமகள் சபாவில், பொதுமேலாளர் எஸ். ஜான் நிர்வாகப் பொறுப்புகளைச் செயல்படுத்தி வந்ததாகவும்; அவருக்கு எதிரான முறைகேடு புகார்களைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, எஸ். ஜான் கைது செய்யப்பட்டதுடன், சபாவின் நிர்வாகமும் முடக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார்.
மேலும், 1998-ஆம் ஆண்டு சபாவில் 5.75 லட்சம் உறுப்பினர்கள், ரூ.84 கோடி ரொக்கம் மற்றும் ரூ.300 கோடி சந்தை மதிப்பிலான சொத்துகள் இருந்ததாகக் குறிப்பிடும் அவர், சபாவின் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகத் தனி அலுவலர் நியமிக்கப்பட்டது; பின்னர் ரிசீவர் குழு அமைக்கப்பட்டது ஆகியவற்றின் பின்னணி குறித்தும் விவரிக்கிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.