பட்டா கொடுத்தாச்சுன்னு சொல்றாங்க…அதிகாரிகள் கவனிப்பார்களா?
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தியாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கிராமத்தில் 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், 30 பேருக்கு மட்டுமே பட்டா கிடைத்ததாகவும், மீதமுள்ள 27 குடும்பங்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்காக ஓராண்டுக்கும் மேலாக முசிறி, துறையூர் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு அலைந்து வருவதாகக் கூறினர். நான்கு தலைமுறைகளாக அதே பகுதியில் வசித்து வரும் தாங்கள் வீட்டு வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்தியும் பட்டா கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். நிலுவை மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
பட்டா கொடுத்தாச்சுன்னு சொல்றாங்க…அதிகாரிகள் கவனிப்பார்களா?
Comments are closed, but trackbacks and pingbacks are open.