உலக ஒலி–ஒளி மரபுப் பாதுகாப்பு தினம்
அக்டோபர் 27, உலக ஒலி–ஒளி மரபுப் பாதுகாப்பு தினம். (World Day for Audiovisual Heritage) யுனெஸ்கோ (UNESCO) அறிவித்துள்ள இத்தினம், திரைப்படங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற ஒலி–ஒளி ஆவணங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு எடுத்துரைக்கிறது.
திருநெல்வேலி இசக்கி அண்ணாச்சி ஓவியர் மற்றும் புகைப்பட கலைஞர். இவரது கருப்பு வெள்ளை புகைப்படங்கள் உலகப் புகழ் பெற்றது.
பழைய 80 ஆண்டு திருநெல்வேலி நகரை கருப்பு வெள்ளை படமாக பதிவு செய்து உள்ளார்.
இப்படி இருந்த நகரா இப்படி மாறி விட்டது என வியப்பு தருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் இசக்கி அண்ணாச்சி புகைப்படங்கள் இடம்பெறும். இதில் அன்றைய மனிதர்களும் அடங்குவர்.
மானிட ஆய்வாளர் பிலோ இருதயநாத் பழங்குடி மக்களை புகைப்படங்கள் மூலம் பதிவு செய்து உள்ளார்.
ஒரு பழங்குடி பெண்ணின் சிறுமி பருவம் முதல் நடுத்தர பருவம் வரை புகைப்படங்கள் எடுத்து வைத்து இருந்தார். இதை அவரின் நூலில் பதிவு செய்துள்ளார். காலப்போக்கில் இவரது புகைப்படங்கள் பாதுகாப்பு இன்றி காணாமல் போனது…
இன்றும் கோவில்களில் கவிஞர் கண்ணதாசன் உரையை கேசட் வடிவில் கேட்க முடிகிறது. இன்று உள்ளது போல் அன்று podcast வசதி இல்லை. கோவிட் காலத்தில் மூத்த தமிழாசிரியர் திரு தவிப்புடன் புலவர் கி முத்தையா அவர்களின் வ உ சிதம்பரம் பிள்ளை எழுதிய மெய்யுறம் நூலை குரல் பதிவு செய்து கூகுள் podcast செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தத் தினத்தின் முக்கியத்துவம்
வரலாற்றைப் பாதுகாத்தல்: பழங்கால நிகழ்வுகள், தலைவர்களின் உரைகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்த ஆவணங்களைப் பாதுகாத்தல்.
கலாசாரத்தைப் பாதுகாத்தல்: நாட்டுப்புறப் பாடல்கள், பழைய இசை, நாடகம், நடனம் மற்றும் பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல்.
அழிவிலிருந்து காத்தல்: பழைய திரைப்படச் சுருள்கள், ஒலிநாடாக்கள் மற்றும் காணொளிப் பதிவுகள் காலப்போக்கில் சேதமடையாமல் பாதுகாத்தல்.
தொழில்நுட்பப் பாதுகாப்பு: பழைய பதிவுகளை நவீன டிஜிட்டல் வடிவங்களுக்கு மாற்றிப் பாதுகாத்தல்.
2026 ஆம் ஆண்டின் கருப்பொருள்
“Your Window to the World” — “உலகைக் காணும் உங்கள் சாளரம்.”
ஒலி மற்றும் ஒளிப் பதிவுகள் கடந்த கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு, மொழி, கலை மற்றும் வரலாற்றை நமக்குக் காட்டும் சாளரங்களாக விளங்குகின்றன.
ஒவ்வொரு புகைப்படமும் ஒரு நினைவைக் கொண்டுள்ளது; ஒவ்வொரு ஒலிப்பதிவும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது; ஒவ்வொரு திரைப்படமும் ஒரு காலத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. இந்த அரிய ஆவணங்களைப் பாதுகாப்பது நமது கடந்த காலத்தைப் பாதுகாப்பதற்குச் சமம்.
“ஒலி–ஒளியைப் பாதுகாப்போம்; உலகின் வரலாற்றையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!”
ஜெயராம் ஜி, ஓவிய ஆசிரியர்
கடையநல்லூர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.