கரண்ட் பில் உயர்வா? ஓட்டு போட்ட மக்களுக்கு இதுதான் பரிசா?

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். முன்பு மாதம் ₹300 முதல் ₹500 வரை வந்த மின்சாரக் கட்டணம் தற்போது ₹700 முதல் ₹2,500 வரையும், சில வீடுகளில் ₹3,500 முதல் ₹4,000 வரையும் வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இலவசத் திட்டங்களை விட விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், குப்பை அகற்றுதல், சாக்கடை சுத்தம் போன்ற அடிப்படை வசதிகளையும் முறையாகச் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரண்ட் பில் உயர்வா? ஓட்டு போட்ட மக்களுக்கு இதுதான் பரிசா? மக்களிடம் நேரடி விசாரணை!

Comments are closed, but trackbacks and pingbacks are open.