தீபாவளி எப்படி போச்சு?

திருச்சியில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது, சிலர் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடியதாகத் தெரிவித்தனர். அதேவேளையில், அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மலைக்கோட்டை பகுதி மற்றும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாகவும் சிலர் கூறினர். இருப்பினும், அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறித்து மாறுபட்ட கருத்துகளையும் பொதுமக்கள் பகிர்ந்து கொண்டனர்.

தீபாவளி எப்படி போச்சு? போன வருஷம் vs இந்த வருஷம்! மக்களின் அதிரடி கருத்து!

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.