பாதிப்பிலிருந்து தன்னம்பிக்கையை நோக்கி !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

காலநிலை மாற்றம் என்பது உலகின் எங்கோ ஓர் மூலையில் நிகழும் தொலைதூர அச்சுறுத்தலாக அல்ல; இது தமிழ்நாட்டின் விவசாயிகள், பெண்கள், கிராமப்புறக் குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுமக்களின் அன்றாட வாழ்வின் எதார்த்தமாகிவிட்டது. சீரற்ற பருவமழை, நீண்டகால வறட்சி மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைதல் போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன. இந்தச் சவாலை அடிமட்ட அளவில் எதிர்கொள்ளும் பணியில், திருச்சியைச் சேர்ந்த  சேவை (SEVAI -Society for Education, Village Action and Improvement) தொடர்ந்து களப்பணியாற்றிவருகிறது.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளவும்; அதே வேளையில் தங்கள் வருமானம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் உதவுவது ஆகியவற்றை இலக்காக கொண்டு செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். வெறுமனே காலநிலைமாற்றம் குறித்து, கதைப்பாக அல்லாமல்; சமூகத்துடன் இணைந்து நடைமுறை சாத்தியமான தீர்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

  1. நீர் பாதுகாப்பு – காலநிலை பாதுகாப்பின் அடிப்படை:

மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர்நிலைகளைத் தூர்வாருதல், பண்ணைக் குட்டைகளை உருவாக்குதல் மற்றும் நிலத்தடி நீரை மறுநிரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

  1. காலநிலை மாற்றத்தைத் தாங்கும் விவசாயம் :

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற வறட்சியைத் தாங்கக்கூடிய பாரம்பரியப் பயிர்களை ஊக்குவிக்கிறது.

  1. பெண்களைச் சுயசார்பு கொண்டவர்களாக மேம்படுத்துதல் :

பெண்கள் சுயஉதவிக் குழுக்களை மையப்படுத்தி நிலையான வாழ்வாதாரங்கள், வீட்டுத் தோட்டம் அமைத்தல், சிறுதானியங்களை மதிப்புக்கூட்டிச் சந்தைப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்முனைவு குறித்த பயிற்சிகள் மூலம், பெண்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான தகவமைப்புச் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

  1. விழிப்புணர்வு மற்றும் சமூகத் தயார்நிலை :

பள்ளி மாணவர்கள் முதல் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் வரை, அனைவருக்கும் விழிப்புணர்வு மற்றும் நிலையான நடைமுறைகள் குறித்த பயிற்சிகளை SEVAI அமைப்பு வழங்குகிறது. பிறரின் உதவியைச் சார்ந்திருக்கும் நிலையை முற்றிலும் மாற்றி தன்னிறைவு திட்டங்களாக முன்னெடுப்பதில் சேவை (SEVAI) தொடர்ந்து சாதித்து வருகிறது.

கோவிந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.