இணையதளத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் கூலிப்படையினர்!

  1. இணையதளம் இன்று கருத்துச் சுதந்திரத்திற்கான களமாக மட்டுமல்லாமல், திட்டமிட்ட அவதூறுகளுக்கான தளமாகவும் மாறி வருகிறது.
  2. சமூக வலைதளங்களில் ஆன்லைன் கூலிப்படையினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  3. பணத்திற்காகப் பிறரின் கருத்துகளைத் தாக்குவதும், தனிநபர்களைக் குறிவைத்து அவதூறு பரப்புவதும் தொடர்கிறது.
  4. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை மறைத்து, போலியான பிம்பங்களை உருவாக்குகின்றனர்.
  5. அரசியல், சாதி, மதம் எனப் பல்வேறு அடையாளங்களின் பெயரில் வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
  6. ஒருங்கிணைந்த கணக்குகள் மூலம் ஒரே கருத்தை ஆயிரக்கணக்கானோர் பேசுவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
  7. விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள், விமர்சிப்பவர்களை மிரட்டுவதையும் அவமானப்படுத்துவதையும் ஆயுதமாக்குகின்றனர்.
  8. இதனால் சுதந்திரமாகக் கருத்துச் சொல்லும் ஜனநாயக வெளியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது.
  9. பணம் கொடுத்து உருவாக்கப்படும் டிஜிட்டல் கூட்டங்களைவிட, ஆதாரங்களுடன் பேசும் குடிமக்களின் குரலே வலிமையானது.
  10. இணையம் உண்மையின் களமாக இருக்க வேண்டுமே தவிர, ஆன்லைன் கூலிப்படையினரின் அவதூறு சந்தையாக மாறிவிடக் கூடாது!

Comments are closed, but trackbacks and pingbacks are open.