ரிலீசுக்கு முன்பே ‘அறிவு’க்கு கிடைத்த கெளரவம்!
’மூவி ட்ரோன் புரொடக்ஷன்ஸ்’ சாய் வினோத்குமார் தயாரிப்பில் சத்யசிவா டைரக்ஷனில் உருவாகி, வரும் டிசம்பர் 11-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘அறிவு’ என்ற படம். இதில் ’உறியடி’விஜயகுமார், ‘கயல்’ ஆனந்தி, சிங்கம்புலி, தீபா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : தில் ராஜு, இசை : டி.இமான், எடிட்டிங் : வெற்றி கிருஷ்ணன்.
பெண்ணுரிமை குறித்து உரக்க குரல் கொடுக்கும் இந்த ‘அறிவு’ கோவாவில் நடைபெறவுள்ள 57-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை அனுப்ப தயாரிப்பாளரும் டைரக்டரும் திட்டமிட்டுள்ளனர். ரிலீசுக்கு ஒரு மாதம் முன்பு சர்வதேச பார்வையாளர்களிடம் ‘அறிவு’க்கு கிடைத்த கெளரவம், தயாரிப்பாளரையும் டைரக்டரையும் உற்சாகப்படுத்தியுள்ளதாம்.
— ஜென்ஸ்
Comments are closed, but trackbacks and pingbacks are open.