சினிமாவில் நடக்கும் ‘ரேட்டிங்’ சீட்டிங் ஆட்டம்! பகீர் கிளப்பிய தயாரிப்பாளர்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நவம்பர் 27-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘மின்னும் ஓர் இரவு’ என்ற படம். நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபரும் டாக்டருமான பி.ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக இனிகோ பிரபாகர், ஹீரோயினாக அஞ்சு கிருஷ்ணா, வில்லனாக டைரக்டர் சுப்பிரமணிய சிவா, மற்ற கேரக்டர்களில் அருவி மதன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

‘மின்னும் ஓர் இரவு’நவம்பர் 16-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த  படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வினியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ‘ட்ரீம் வாரியர்ஸ்’ குகன், டைரக்டர்கள் எஸ்.ஆர்.பிரபாகரன், மணிகண்டன் ஆகியோர் வந்திருந்தனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தயாரிப்பாளர் ராபர்ட் ராஜ், டைரக்டர் சிவபிரபு, ஹீரோ இனிகோ பிரபாகர், ஹீரோயின் அஞ்சு கிருஷ்ணா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே படத்தைப் பற்றியும் இதை உருவாக்கியுள்ள இளைஞர்களின் உழைப்பைப் பற்றியும் பெருமிதமாகப் பேசினார்கள்.

விநியோகஸ்தர் குகன்
விநியோகஸ்தர் குகன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வினியோகஸ்தர் பேசிய போது பல பகீர் தகவல்களைச் சொல்லி சினிமா உலகை அதிர வைத்தார். அவர் பேசியது….

த்ரில்லர் ஜானரில் ஒரு கிராமத்தில் ஓர்  இரவுக்குள் கதை நடக்கிறது. ஐந்து இளைஞர்கள் கைககளில் கிடைக்கும் ஒரு பொருளால் அவர்களுக்கு பல விபரீதங்கள் நடக்கின்றன. இதை பக்கா கமர்ஷியலாக சொல்லியுள்ளார் டைரக்டர் சிவபிரபு செல்வராஜ். எங்கள் நிறுவனம் தொடர்ந்து புதிய தயாரிப்பாளர்கள், திறமையான புதுமுக இயக்குனர்களின் படங்களை வினியோகம் செய்கிறோம். இந்தப் படத்தின் புரமோஷனுக்காக நாங்கள் கேட்ட ஒவ்வொரு விஷயத்திற்கும் தயாரிப்பாளர் ராபர்ட் ராஜ் மிகச் சிறந்த ஒத்துழைப்பு தந்தார்.

‘மின்னும் ஓர் இரவு’இப்ப சினிமாவில் டிக்கெட் முன்பதிவு  தளங்களில் படங்களுக்கு ரேட்டிங் போடுகிறார்கள். இது சின்னப்படங்களுக்கு சில நேரங்களில் பாதகமாகவும் சில நேரங்களில் சாதகமாகவும் முடிகிறது. ஆனால் பெரிய கம்பெனிகள், பெரிய ஹீரோக்கள், டைரக்டர்களின் பல படங்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது. இதை எதிர்த்து பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றத்திற்குப் போகப் போகிறார்கள். இருந்தாலும் இந்த ரேட்டிங் ஆப்பை தங்களது சட்ட வல்லுனர்களின் துணையுடன் தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க அவர்களால் முடிகிறது.  இதைப் பத்தி சிறு படங்களின் தயாரிப்பாளர்களிடையே விழிப்புணர்வு இல்லை என்று தான் சொல்வேன்.

‘மின்னும் ஓர் இரவு’இதே போல் இன்னொரு சீட்டிங் ஆட்டமும் நடக்குது. ஒரு சிலர் சில படங்களுக்கு தியேட்டர்களில் 100, 200 டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு அந்தப் படத்தைப் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களை சோஷியல் மீடியாக்களில் பரப்புகிறார்கள். இதனால் அந்தப் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு பல இன்னல்கள் வருகிறது. இந்த மாதிரியான பல அக்கப்போர்களைத் தாண்டித்தான் படங்களை ரிலீஸ் பண்ணுகிறோம். எனவே ரேட்டிங் என்ற இந்த சீட்டிங் ஆட்டத்தை சீக்கிரமே ஒழித்தால் தான் தமிழ் சினிமா நல்லாருக்கும்” என பொங்கித் தீர்த்தார் குகன்.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.