Thursday, November 19, 2026 | 12:52 PM IST

வீரமணி வழக்கு: IPS அதிகாரிகள் மீது SIT பிடி… அடுத்து என்ன?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அருண் IPS :  அவர் அப்படித்தான் !

ஐ.ஜி.ஆக இருந்தபோது, சங்கர் ஒரு நாள் எதற்காகவோ   இங்கு  வந்திருந்தார். ஆனால், IGP அவரை உள்ளே விடாதே என்று யாருக்கும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. மாறாக, சங்கரை உள்ளே அழைத்து அமர செய்தார். நீங்கள் என் பெர்ஃபார்மன்சை பற்றி நிறைய கடுமையாக ,  கேவலமாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஆனால், என்னை பெண் பித்தன்  ( Womaniser) என்று விமர்சித்ததை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கு 10 நாட்கள் நேரம் தருகிறேன். என் துறையிலிருக்கும் யாராவது ஒரு பெண் காவலரோ, பெண் அதிகாரியோ, என்னால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்ல சொல்லுங்கள். நான் சர்வீசை விட்டே விலகி விடுகிறேன் என்று சங்கருக்கு சவால் விட்டு அனுப்பி இருந்தார்.

ஏமாற்றத்தோடு , 10 நாள் கழித்து ,    திரும்பி வந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் IGP யிடம். எதிரணி IPS அதிகாரிகளின் தூண்டுதலால் ஆராயாமல் நிகழ்ந்த தவறுக்காக Sorry என்ற ஒரே வரியில் தன் சங்கடத்தை வெளிப்படுத்தினார் சங்கர். ” என்றார். அன்று அருணுக்கு “சத்தியசீலன் ” என்று சான்றிதழ் கொடுத்த அவரது விசுவாசியே இன்று சேற்றை வாரி இறைத்து கொண்டிருக்கிறார் அவர் மீது.

அருண் IPS
அருண் IPS

ஆனால், இன்று அந்தப் போலி பெருமைகள் எல்லாம் புதைக்குழியில் மூழ்கிக் கிடக்கிறது இவரா  ? இப்படியா ? என்று இன்னும் கூட சிலரால் நம்ப  முடியவில்லை . வயாகராவை வாயில் அடக்கி ,  சிறுமிகளை சீரழித்த ஒரு முதிர் கிழவனுக்கு ,  முட்டுக் கொடுத்திருக்கிறார் முன்னாள் மாநகர கமிஷனர் என்பது தான் கேவலத்தின் உச்சகட்டம்.

மூடி மறைக்கப்பட்டு , மாநிலத்தையே மிரட்சியில்  ஆழ்த்திய  இந்த வழக்கு வெளியுலகிற்கு தெரியவர ,  ஒரு ஆட்சி மாற்றமே அவசியமாகியிருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த கேவலமான  கொடூர குற்ற வழக்கில் ஒரு சீனியர் IPS அதிகாரி,  இரண்டு துணை கமிஷனர் , இரண்டு உதவிக் கமிஷனர்கள்,  இரண்டு ஆய்வாளர்கள் என்று தயவு தாட்சண்யம் பார்க்காமல் தட்டி தூக்கி இருக்கிறது சிறப்பு புலனாய்வு படை   (SIT ).

தரமான ஒரு பெண் உயரதிகாரி ( தேன்மொழி ) இதன் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பதால்,  எவரையும் தப்ப விட மாட்டார். தவறு செய்தவர் சிட்டி போலீசில் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரே என்ற போதிலும் தர்மத்தை சூது கவ்வ விடாமல்  சுற்றி வளைத்திருக்கிறார்.

எந்த சறுக்கலும் இல்லாமல் சர்வீசில் இன்னும் ஐந்து வருடங்கள் பயணித்தாக வேண்டும். ஆனால், இன்று வழியெங்கும் வலுவான வேகத்தடைகள் வரிசை கட்டி நிற்கிறது. மீண்டு வருவதற்குள் மொத்தமும் முடிந்து போயிருக்கும்.

பொதுவாக இது போன்ற வழக்குகளில் பழிக்கு ஆளான பதவியிலிருக்கும்  உயர் அதிகாரிகள் (Serving Officers ) பாதிக்கப்பட மாட்டார்கள். கடுமையாக போராடி எப்படியேனும் கரை சேர்ந்து விடுவார்கள். ஆனால், வீரமணியின் வழக்கில் இவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் வரிசை கட்டி நிற்பதால் வாய் திறக்க முடியாது உச்ச நீதிமன்றத்திலும் கூட.

சவாலான , கொடூர கொலை குற்ற  வழக்குகளில் 90 நாட்களுக்குள் கூட  , குற்றப்பத்திரிக்கை  ( Charge Sheet ) தாக்கல் செய்ய முடியாமல் கை பிசைந்து நிற்பார்கள்   காவல்துறை அதிகாரிகள்.  ஆனால் 46 நாட்களுக்குள் இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது , இந்த வெள்ளை மாளிகையின் வரலாற்று சாதனையாகும்.

குற்றப்பத்திரிகையை சரியான நேரத்திற்குள் சமர்ப்பித்ததில்  காட்டிய தீவிரத்தையும் அதிரடியையும் ,  தீர்ப்பு வரும் வரை தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

—   இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.