Thursday, November 19, 2026 | 1:38 PM IST

3.5 லட்சம் மாணவர்கள்… 7,198 பேராசிரியர் பணியிடங்கள் காலி! அழிவின் விளிம்பில் அரசு கல்லூரிகள்!

புதிய கல்லூரிகள் திறப்பு... காலியாகும் பேராசிரியர் பணியிடங்கள்! மாணவர்களின் எதிர்காலம் என்ன?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாட்டில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இக்கல்லூரிகளில் சுமார் 3.5 இலட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 350-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் இயங்கி வருகின்றன.

அநேக கல்லூரிகளில், காலை – மாலை என இருநேர வகுப்புகளாக நடைபெற்றும் வரும் நிலையில், அரசின் விதிமுறைகளின்படி சுமார் 12,000 பேராசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, 7198 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. அதாவது, சரிபாதிக்கும் மேல் பற்றாக்குறை. இந்நிலையில், தற்போது 70-க்கும் மேற்பட்ட அரசுக்கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இன்றைய சூழலில், ஒரு டிகிரியாவது படித்தால்தான் படித்தவன் என்றே மதிப்பார்கள்; குறைந்தபட்சம் பத்தாயிரம் சம்பளத்திலாவது வேலை கிடைக்கும் என்ற நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேவை நாளுக்குநாள் கூடிக்கொண்டேதான் இருக்கிறதேயொழிய குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், கிராமப்புறங்களை சேர்ந்த ஏழ்மையான பின்னணியிலிருந்து கல்விபயில விரும்பும் மாணவர்களின் ஒரே போக்கிடம் அரசு கலை – அறிவியல் கல்லூரிகள்தான்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் போதுமான பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்பை – உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் !

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் பார்வை அரசு கலை – அறிவியல் கல்லூரி பக்கம் திரும்புமா?

தஞ்சை க.நடராசன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.