Saturday, November 21, 2026 | 1:54 PM IST

உணவகமா? பழங்காலப் பொருட்கள் அருங்காட்சியகமா? அசத்தும் “இது நம்ம ஊரு இட்லி கடை”!

10 ரூபாய்க்கு மிருதுவான இட்லி... மண் சட்டியில் சாம்பார்... மண் கலையத்தில் பழைய சோறு... முழுக்க முழுக்க விறகு அடுப்புச் சமையல்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பெயர்ப் பலகையைப் பார்த்ததும் ஒரு விநாடி அங்கேயே நிற்கச் செய்யும். பெயரைப் படித்தவுடன் “என்னதான் அங்கே” என கால்கள் அதன் நுழைவாயிலின் உள்ளே தடம் பதிக்கத் தூண்டும். “இது நம்ம ஊரு இட்லி கடை” என்பதுவே அந்தக் கடையின் பெயர்.

வித்தியசமான உணவக நிலையம் என்று மட்டுமல்ல, அதன் உள்ளே சென்று விட்டால் வித்தியாசமான உணர்வுகளையும் நீங்கள் அங்கே உணரலாம்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இது நம்ம ஊரு இட்லி கடைதிருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பைபாஸ் சாலை. சாஸ்த்ரா யுனிவர்சிட்டி அடுத்து அமைந்துள்ளது “இது நம்ம ஊரு இட்லி கடை”. திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வரும் போது, சாச்த்ராவிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் அதன் இடது புறத்திலும், தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வருகையில் சாஸ்த்ராவுக்கு முன்னராக அதன் வலது புறத்தில் அமைந்து உள்ளது அந்த வித்தியாசமான உணவகம்.

அதன் உரிமையாளர் ஜி.எம். அருள்குமார் கோவிந்தராஜ், அருகே புதுப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். அதனால் என்ன? பாரம்பரியமான பழமைகள் மீதாகத் தீராக் காதல் கொண்டிருப்பவர். அதனால் தான் உணவாக வாயிலில் உள்ளே நுழையும் போதே வலது விளிம்பில் நாம் தரிசிக்கிறோம் அசலான ஏர்க் கலப்பையும், அதற்குக் கீழாக அசலான வண்டிச் சக்கரங்கள் இரண்டும்.

ஜி.எம். அருள்குமார் கோவிந்தராஜ்
ஜி.எம். அருள்குமார் கோவிந்தராஜ்

“என்ன இதெல்லாம்?” என்கிறோம் அவரிடம்.

“எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் பசித்த வயிறுக்கு இந்த சோத்துல தாங்க வந்து கை வெச்சாகணும். அதனை நமக்கு விளைவிச்ச தர்றவங்க நம்ம விவசாயிங்க. திருக்குறள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச குறளுங்க அது. // சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் // // உழந்தும் உழவே தலை. // என்பது நம்ம திருவள்ளுவர் வாக்குங்க.” புன்னகை பூத்துச் சிரிக்கிறார் அருள்குமார்.

உணவகத்தின் கட்டுமானமே மிகவும் எளிமையாக அத்தனை வசீகரமாக நம்மை ஈர்த்து விடுகிறது. ஆமாம். சென்றவுடன் அதன் மேல் விதானத்தை நோக்கினால், தூக்கணாங்குருவிக் கூடுகள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த  உணவகத்தின் ஒரு பகுதியில் இருபத்தி நான்கு மணி நேரம் இயங்குகின்ற “கும்பகோணம் ஐயர் கபே”. பெயருக்குத் தான் அது. கைச்சூடு பொறுக்காத மெலிதான பித்தளை டபராவில் இவர்கள் காபி தருவதில்லை.

இது நம்ம ஊரு இட்லி கடைஇஞ்சி பால், சுக்கு பால், மஞ்சள் தூள் பால், சூடான காபி என அத்தனையும் சுவையாக. அந்த அரங்கில் மூதாதையர் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன பழங்காலப் புழங்கு பொருட்கள்.

தானியங்களைச் சேமித்து வைக்கும் மரத்தினால் வடிவமான “தொம்பை”கள்’ இரண்டு. மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு, லாந்தர் எனப்படும் அரிக்கேன் விளக்குகள், காடா விளக்கு, “பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” என்பது போல பழங்கால மரப் பல்லாங்குழிகள் இரண்டு மூன்று. நீளமான மரச் சட்டத்துடன் இரும்பிலே பெரிதான அரிவாள்மனை ஒன்று. ரேடியோ பெட்டிகள் எனப்படும் பழங் காலத்து வானொலிகள், கேமிராக்கள் மற்றும் பழங்காலத்துப் புகைப்படக் கருவி. அந்தக் காலத்து டைப் ரைட்டிங் மிசின் ஒன்றும் சுத்தமாகத் துடைக்கப்பட்டு ஒரு டேபிளில் உள்ளது. “இனிமே நீங்கள்லாம் என்னைய எதுக்கு தொட்டுத் தொட்டுத் தட்டச்சு பண்ணப் போறீங்க?” அந்த டைப் மிசின் ஏக்கத்துடன் நம்மைப் பார்க்கிறது.

“இது நம்ம ஊரு இட்லி கடை” என்பது என்ன உணவகமா? அல்லது பழங்காலப் புழங்கு பொருட்கள் அருங்காட்சியகமா? எனக் கேட்டால், “ரெண்டும் சேர்ந்தது தாங்க. நம்ம கடைக்கு உள்ளே ஒருத்தரு வர்றார்னா, அவருக்கு நவீனமா எதையும் காட்சிப்படுத்தாம அவரோட பாட்டி வூட்டுக்குள்ளே வந்துட்ட மாதிரி ஒரு உணர்வை அவுங்களுக்குத் தரனும்ங்கறது தாங்க நம்மளோட நோக்கம்.” என்கிறார் நாற்பது வயதாகும் அதன் உரிமையாளர்,

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஏனுங்க ஏதோ ஒரு இட்லி கடையப் பத்திச் சொல்றேனிங்க. இப்ப என்னமோ ஏரு ஏரக்கலப்பை வண்டிச் சக்கரம் லாந்தர் லைட்டு ரேடியோ பெட்டி அருவாமனை பல்லாங்குழி பலகை தூக்கணாங்குருவிக் கூடுனு என்னென்னமோ சொல்லிட்டு இருக்கீங்க. அதுக்குள்ளார இட்லி ஆறிடப் போவுதுங்க. அந்த இட்லியப் பத்தி சூடா சொல்லுங்க.

காலை ஆறரை மணிக்குச் சிற்றுண்டி. சூடான சுவையான மிக மிருதுவான (இது ரொம்ப முக்கியம்ங்க) இட்லிக்கு “இது நம்ம ஊரு இட்லி கடை” நூத்துக்கு நூறு உத்தரவாதம். எந்த சந்தேகமும் தேவையில்லை. அரிசி மாவு உளுந்தம் மாவு வெந்தயம் மாவு இவைகளின் கலவையில் தான் இட்லியின் மிருதுவானத் தன்மை உறுதியாக்கப்படும். இதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்து வருகிறோம் என்கிறார் உணவகப் பணியாளர். ஒரு இட்லி பத்து ரூபாய் தான்.

இது நம்ம ஊரு இட்லி கடைமண் சட்டியில் சூடான சுவையான சாம்பார் நிரப்பி டேபிளில் வைத்து விடுகிறார்கள். தேங்காய்ச் சட்னி, காரச் சட்னிகளும்  உண்டு. பூரி மசால், வெண் பொங்கல், மெதுவடை ரசித்து ருசித்துச் சாப்பிடலாம்.

தோசை வகைகளில் நிறைய்ய நிறைய்ய. ஆம்.

பொடி தோசை, நெய்ப்பொடி தோசை, ஆனியன் பொடி தோசை, நெல்லூர் தோசை, மசாலா தோசை, நெய் நல்லூர் தோசை, நெல்லூர் மசாலா தோசை, நெய் தோசை, ஆனியன் தோசை, முருங்கைக் கீரை தோசை, கம்பு தோசை, ராகி தோசை, செட்டி நாடு தோசை, புதினா தோசை, தூதுவளை தோசை, வல்லாரை தோசை, பிரண்டை தோசை, கீழாநெல்லி தோசை, மலமுருங்கை தோசை, முடக்கத்தான் தோசை, பொன்னாங்கன்னி தோசை, மணத்தக்காளி தோசை ஊத்தாப்பங்களில் ஆனியன், தக்காளி, பொடி, கேரட் என்று பல வகைகளில்.

இது நம்ம ஊரு இட்லி கடைமதியம் பதினொன்றரை மணியில் இருந்து மதிய உணவாக சாப்பாடு. சோறு, சாம்பார், காரக் குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல், ஏதேனும் ஒரு வகை ஊறுகாய். அங்கு சாப்பிடும் ஒருவருக்கு அளவிலாச் சாப்பாடு நூறு ரூபாய்.

அதே நேரத்தில் பார்சல் சாப்பாடும் நூறு ரூபாய் இவர்களின் தனிச் சிறப்பு.

மழைக் காலம், பனிக் காலம் தவிர்த்து வெயில் காலங்களில் காலையில் பழைய சோறு. அதுவும் ஒவ்வொருவருக்கும் ஒரு மண் கலையத்தில். மோர் மிளகாய் வத்தல், சுண்டை வத்தல், ஊறுகாய். இவைகளுடன் மண் கலையம் நிரம்பிய பழைய சோறுக்கு அறுபது ரூபாய். அதுவும் பசுந்தயிர் மோர் விடப்பட்ட பழைய சோறு.

இது நம்ம ஊரு இட்லி கடைமாலை ஐந்தரை மணியில் இருந்து இரவு பதினொன்றரை மணி வரைக்கும் இரவு நேரச் சிற்றுண்டி. இட்லி, தோசை, ஊத்தாப்பம் இவைகளுடன் கோதுமை புரோட்டா என்பது இங்கே ஸ்பெசல் ஆகும். கோதுமை புரோட்டா ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபாய்.

உணவகத்தில் முற்றிலும் விறகு அடுப்புச் சமையல் தான். மூன்று வேளைகளிலும் முழுமையான சைவ வகைகள் தான் இந்த “இது நம்ம ஊரு இட்லி கடை”யில்.

உணவகத்தில் சாப்பிட்டவர்கள் ஒவ்வொருவரின் கருத்தும், “இது நம்ம ஊரு இட்லி கடை” மட்டுமல்ல, “இது நம்ம வீட்டு இட்லி கடை” என்பது தான்.

—  ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.