Monday, November 23, 2026 | 6:35 PM IST

அரசு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதா? பேரூரில் வெடித்த நிலப் பிரச்சினை!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பேரூர் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலம் தொடர்பாகப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சர்வே எண் 47/3A பகுதியில் அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளிலும், பட்டா நிலங்களிலும் பல ஆண்டுகளாக வசித்து வரும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

போலி ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்ற உத்தரவு பெற்றதாகக் கூறி, வீடுகளை காலி செய்யவும், மக்களை வெளியேற்றவும் முயற்சி நடைபெறுவதாகப் புகார்தாரர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நில ஆவணங்களை முறையாக ஆய்வு செய்து, பொதுமக்களின் குடியிருப்பு உரிமையைப் பாதுகாக்கவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதா? பேரூரில் வெடித்த நிலப் பிரச்சினை!

Comments are closed, but trackbacks and pingbacks are open.