மாடு கடத்தலுக்கு பின்னால் புரோக்கர்கள்?
சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக கேரளாவுக்கு வேன் மூலம் பசு மாடுகள் கடத்தப்படுவதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. கடந்த 20ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தைப் பார்த்த நிருபர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும், புகார் அளித்தவர் மீதே காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகவும் அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாடு கடத்தலைத் தடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் மாவட்ட ஆட்சியர் மூலம் முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளதாகக் கூறினார். மாடு கடத்தல் தொடர்பாக அரசு உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் டூ கேரளா… வேனில் மாடுகள் கடத்தலா? வெடித்த சர்ச்சை!
Comments are closed, but trackbacks and pingbacks are open.