Friday, November 27, 2026 | 6:43 PM IST

சுதாரித்துக் கொள்ள வேண்டும் CM சார் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தவெக அரசுக்கு சந்தீப்பின் மேல் அப்படி என்ன சங்கடம் என்று தெரியவில்லை,  தொடர்ந்து இவரை தூக்கியடித்துக் கொண்டே இருக்கிறது. தமிழக காவல்துறையின் தலைமை DGP யாக திறமை மிக்க இவரை தேடிப்பிடித்து அமர்த்தியது தேர்தல் ஆணையம். விஜய் முதல்வராக இல்லாமல்,  வாக்கு எண்ணிக்கையில் த.வெ.க. முன்னிலை பெற்றபோது  இருந்தபோதே அவரது பாதுகாப்பு பணியில் எந்த பாரபட்சமும் இல்லாமல்  தன் கடமையை செய்திருந்தார்  ராத்தோர்.

அடுத்து ஆட்சி , அதிகாரம் விஜயின் வசம் வந்தபோது,  மீண்டும் தலைமை  DGP-க்கான முறையான தேர்வில் சந்தீப்பின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 1992 பேச்சில் இருந்தவர்களை ஓரம் கட்டி , 1994 ஆம் வருட பேட்சிலிருந்த மகேஷ் குமார் அகர்வாலை யாருமே எதிர்பாராத நிலையில் தலைமை டி.ஜி.பி.யாக நியமித்தார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சந்தீப்பிற்கு சிறை  ( Prison ) ஒதுக்கப்பட்டது. சிறைத் துறையின் சீனியர் IPS  அதிகாரிக்கு தகவல் கொடுக்காமல், முதல்வர் சிறைத்துறை ஆய்வை மேற்கொண்டார். தகவல் பறந்ததும் அதிரடியில் அங்கு ஆஜரானார் ராத்தோர். அன்றே தெரிந்து விட்டது. தொல்லைகள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது என்று. அடுத்த இடி,  தேனி சப்ஜெயிலில் 13 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடி தலைமறைவானது. எந்த விளக்கமும் கேட்காமல் வீசியெறிந்து விட்டார் சிறைத்துறை தலைவரை. வந்து விழுந்த இடம் மின்வாரிய விஜிலென்ஸின் தலைமை பொறுப்பில்.

சந்தீப் ராத்தோர்
சந்தீப் ராத்தோர்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

காவல்துறையில் தண்டனைக்குரிய பதவி  ( Non Sensitive ) என்று வர்ணிக்கப்படுபவை புகளுர் காகித தொழிற்சாலை,   ஆவின் , சமூக நீதி  , மனித உரிமை ஆணையம் ,  மெட்ரோ ரயில் , மின்வாரியம் ,  போலீஸ் அகாடமி , குற்ற ஆவண காப்பகம்  போன்றவைகளே. ஆனால், இதில் தூக்கி அடிக்கப்பட்டவர்கள் அத்தனை பேருமே திறமை அற்றவர்கள் அல்ல.

சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர் சந்தீப். எவராலும் எளிதில் அணுகக் கூடிய இனிய மனிதர். சமீபத்தில் சிறைத்துறை இயக்குனர் அலுவலகத்தை ஒரு ரவுண்டு வந்தபோது , கண்ணில் பட்ட அமைச்சுப் பணியாளர் ஒருவர் நம்மிடம் ,  சந்தீப் சாரை ஒரு குறையும் சொல்ல முடியாதுங்க. இங்க வந்த ஒரே வாரத்தில ஜெயிலோட மொத்த ஜாதகத்தையே   அலசி எடுத்துட்டாரு. சிறை பாதுகாப்பு பத்தியும் ,  போதை வஸ்து , செல்போன் சப்ளை  ( Illicit  mobile Entry ) என்று அத்தனையும் எப்படி உள்ளே வருது, பல சிறைகள்ல சைரன்  (அபாய சங்கு )  வேலை செய்யல அப்படின்னு சிறப்பா ஒரு அறிக்கை தயாரிச்சார். அது உள்துறை செயலாளருக்கும் , தலைமை DGP க்கும் அனுப்பி வச்சாரு. ஆனா, ஆக வேண்டியதை ஒண்ணுமே  பண்ணாமலே உம்முன்னு இருந்துட்டாங்க. இப்ப அவரு கணிச்ச மாதிரியே கைதிங்க தப்பிச்சு ஓடிட்டாங்க”

சர்வீசில் மீதம் இருப்பது முழுமையாக இன்னும் 15 மாதங்கள். அடுத்து போலீசிலிருந்து  பிரியாவிடை.

முதல்வருக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் நீண்டு கொண்டே இருக்கின்றது. யாராலும் எளிதில் அணுக முடியாத ஒரு இரும்புத்திரை  எழுப்பப்பட்டுள்ளது. இது முன்னாள் முதல்வரின் ஜெயலலிதாவின் பார்முலா. முடிவில் அந்த பார்முலாவே அவரை பாதாளாத்தில் தள்ளி விட்டது என்பதை உலகறியும்.சுதாரித்துக் கொள்ள வேண்டும் CM சார்!

—  இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.