Saturday, November 28, 2026 | 2:03 PM IST

ஆருத்ரா மோசடியில் பாதிக்கப்பட்டவரா? வந்தாச்சு புது அப்டேட் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஆருத்ரா மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாட்டின் எந்த மூலையிலிருந்தும் புகார் அளிப்பதற்கு ஏதுவாக க்யூ.ஆர். குறியீட்டை வெளியிட்டிருக்கிறது, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட நிறுவனம் ஒரு இலட்சம் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டித் தருவதாக 1 இலட்சத்துக்கும் அதிகமானோரிடமிருந்து சுமார் 2438 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கியது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்த நிலையில், துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆருத்ரா கோல்டி டிரேடிங்கில் முதலீடு செய்தவர்கள் தங்களின் பெயர், முதலீடு செய்த மொத்த தொகை, திரும்பப் பெற்ற பணம், வட்டி, தங்க நாணயங்கள் மற்றும் இதர பலன்கள், இன்னும் பெற வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட துல்லியமான விவரங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும்; சந்தேகம் இருப்பின் அவற்றை “தெரியவில்லை” என்றே பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

புகாரை பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 95666 36613 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

–    அங்குசம் புலனாய்வுக்குழு.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.