முதல்வர் வருகை எதிரொலி : வேகமாக எடுக்கப்பட்ட வேக தடுப்பான்கள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முதல்வர் வருகை எதிரொலி : வேகமாக எடுக்கப்பட்ட வேக தடுப்பான்கள்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

வேகத் தடுப்பான் சாலைகளில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்படுவது வேகத்தடை ஆகும். வேகத்தடை மீது ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கலாம்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

வேகத்தடை அடிக்கடி மக்கள் சாலையைக் கடக்கக்கூடிய இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் முன்பு உள்ள சாலைகள், வண்டிகள் கூடிய கவனத்துடன் செல்ல வேண்டிய இடங்கள் போன்றவற்றில் வேகத் தடுப்பான்கள் அமைக்கப்பட்டிருந்தன திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர்  வருகையை முன்னிட்டு இரவுபகலாக வேகத்தடுப்பான்கள் அகற்றப்பட்டு தார் சாலைகள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி தில்லைநகர் உட்பட்ட பகுதிகளில் மட்டும் 16 வேக தடுப்பான்கள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னூர் பள்ளிவாசல் முன்பு திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு ஐயப்பன் திருக்கோவில் முன்பு என பல்வேறு வேகத்தடை முதல்வரின் பாதுகாப்பிற்காக அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் பல்வேறு குண்டும் குழியுமான சாலைகள் சீர் அமைக்கப் பட்டிருக்கின்றன. சாலை இருமருங்கிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடியும் விளம்பர பதாகைகள் தமிழக முதல்வரை வரவேற்று அமைக்கப்பட்டு உள்ளன.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.