அதிமுகவை உடைக்க சதி :

0

அதிமுகவை உடைக்க சதி :

தொட்டியம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர்
இரண்டு நாள் தேர்தல் பிரசார பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் தொட்டியம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில்,

அதிமுகவை உடைக்க நடைபெற்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க நடைபெற்ற முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
தற்போது அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த நடைபெறும் முயற்சியும் வெற்றி பெறாது.
அதிமுக தற்போது வலிமையான கட்சியாக உருவெடுத்துள்ளது.
வலிமையான கட்சியான அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது.
கலைஞரின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக திமுக தலைவராக்கப் பட்டவர் மு.க.ஸ்டாலின். தான் கடுமையாக உழைத்து படிப்படியாக முதலமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொய்யை கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை.

பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும் என்கிற வார்த்தை ஸ்டாலினுக்குத் தான் பொருந்தும். திமுக தேர்தலுக்காக வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் கூறுவதை கேட்டு செயல்படுகிறது என்றார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.