திருச்சி பத்திரிக்கையாளர்களை மறித்து வழிப்பறி.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..
திருச்சி பத்திரிக்கையாளர்களை மறித்து வழிப்பறி. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..
திருச்சி புறநகர் பகுதியில் நேற்று 21/06/2021 இரவு 9.30 மணி அளவில் முசிறி பகுதியிலிருந்து பணி முடித்துவிட்டு தா.பேட்டைக்கு டூவலரில் சென்று கொண்டிருந்த தினத்தந்தி நிருபர் விஜயன், தினகரன் நிருபர் வேல்முருகன் ஆகியோரை தும்பலம் காட்டுப்பகுதியில் இரண்டு டூவிலர்களில் வந்த 4 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து டூவிலரில் மோதி கீழே விழ வைத்தனர். இதில் தினகரன் நிருபர் கீழே விழுந்து காட்டு பகுதியில் ஓடி தப்பினார்.
தனியே சிக்கிய தினத்தந்தி நிருபர் விஜயனின் கழுத்தில கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம், செல்போன், டூவீலர் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி உள்ளனர்..
உயிருக்கு பயந்து காட்டுப்பகுதியில் தப்பிய நிருபர் வேல்முருகன் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்து டி.எஸ்.பி. பிரம்மாநந்தனுக்கு தகவல் கொடுத்தார். இதற்கு இடையில் சன்.டிவி அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க உடனே எஸ்.பி. மூர்த்தி சம்பவ இடத்திற்கு
காவல்துறையினரை அனுப்பி நிருபர்களை மீட்டனர்.
இதுகுறித்து நிருபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முசிறி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
–ஜித்தன்