டுபாக்கூர் நிருபரை பிடித்துக் கொடுத்த திருச்சி பத்திரிக்கையாளர்கள்..
டுபாக்கூர் நிருபரை பிடித்துக் கொடுத்த திருச்சி பத்திரிக்கையாளர்கள்..
திருச்சி மாநகர பகுதியான கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நேற்று 23/06/2021 அன்று TN 45 M 3718 என்கிற எண்ணை கொண்ட வேகன் ஆர் கார் நின்று கொண்டிருந்துள்ளது.
அதில் சைரன் அமைக்கப்பட்டிருந்ததுடன் பிரஸ் என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இதனை கண்ட பத்திரிக்கையாளர் சிலர் சம்பந்தப்பட்ட காரினை நிறுத்தி நீங்கள் யார்? பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கீங்களே எந்த பத்திரிக்கை நிறுவனத்தை சேர்ந்த நிருபர், நீங்கள் என்று கேட்டு உள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் பத்திரிகையாளர்களுக்கும் காரின் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்படவே தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் அகிலா விசாரித்தபோது திருச்சி காட்டூர் விக்னேஷ் நகரை சேர்ந்த கிரண் சிங் என்றும் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
அடிப்படையில் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிய தற்கும் சைரன் சுழல் விளக்கு வைத்ததற்கான சரியான விளக்கம் அளிக்காததால் சம்பவ இடத்திலேயே பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் காரில் இருந்த சைரன் அகற்றப்பட்டது.
மேலும் பத்திரிக்கையாளர் கூறிக்கொண்டு வளம் வந்த நபர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி பத்திரிக்கையாளர்கள் கூறியதின் பேரில் சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் கிரண் சிங் மற்றும் காரினை ஓட்டிவந்த டிரைவர் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருச்சி மாநகரில் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் பல பேர் வலம் வருவதாக தெரியவருகிறது.
இதுபோன்ற நபர்களை பத்திரிகையாளர்களே களை எடுத்தால் மட்டும் தான் இதற்கு முடிவு உண்டு..
–ஜித்தன்