திருச்சியில் பிரபல ரவுடிகள் பெயரில் உலாவரும் ஆடியோ…

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சியில் பிரபல ரவுடிகள் பெயரில் உலாவரும் ஆடியோ…

திருச்சியில் சமீபகாலமாக சமூக விரோதிகளின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. திரைக்குப்பின் இருந்து கொண்டு கொலை, கொள்ளை போன்றவைகளை அரங்கேற்றிக்கொண்டிருந்த பெரிய ரவுடிகள் எல்லாம் தற்போது வெளியே வந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது கூலிப்படையை ஏவுவது என இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருச்சி டு கரூர் நெடுஞ்சாலையில் பெட்டவாய்த்தலை அருகே தேர்தல் நேரங்களில் நான்கு சக்கர காரில் வந்த மர்ம பணம் கொள்ளை போன விவகாரத்தில் பிரபல ரவுடியான ரவி என்கின்ற சாமி ரவி மற்றும் கூட்டாளிகள் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்நிலையில் சாமி ரவி மற்றும் இன்னும் மதுரை சிறையில் உள்ள பெரிய ரவுடிகள் குறித்த தகவல்களை 2 ஆசாமிகள் பேசிக்கொள்ளும் 18.38 நிமிடம் கொண்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் கசிந்து பரவி வருகிறது.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

அந்த ஆடியோவில் பிரதர் அண்ணன் பேசினாரா என்னைத்தேடி வீட்டுக்கு வந்தீங்களாமே, சாமி ரவி அண்ணன் கிட்ட ராம்ஜி நகர் மதன்னு என் பேர சொல்லுங்க என்னை நல்லாவே தெரியும், அவருக்கு நா புள்ள மாதிரி என்று தொடங்கிய ஆடியோ பிரபல ரவுடிகள் ஆன அட்டாக் பாண்டி, சாராய பாண்டி, குணா ஜி என்று பிரபல ரவுடிகளை பற்றி கக்க தொடங்கினார்.

3

மேலும் நக்ஸிட் பஞ்சாயத்து முடிச்சிட்டீங்களா, கார்த்தி டாக்டர் வீட்டுக்குள்ள அடிசிங்கிலே முடிஞ்சிடுச்சா என்று கேட்க அதற்கு எதிரே உள்ள நபர் நாங்க அத பண்ணலையே அதுக்கு நமக்கும் சம்பந்தமில்லை, என்று சொல்ல உங்க பேரு தான் அதுல அடிபட்டது போட்டோ கூட வந்தது பார்த்தேனே.. எனக்கு தெரியல நாம அடிக்கல, தென்னூர் மேட்டர்ல உங்க பேரு தான் அடிபட்டது அது நான் இல்லைங்க சின்ன மகாராஜா, என்னோட போட்டோ வந்தது வேற மேட்டர்ல என்று முடித்துக் கொண்டார் அந்நபர்.. சரி பிரதர் அண்ணன் கிட்ட பேசிட்டு சொல்லுங்க.. எங்க வீட்டுல அந்த கம்மல் பய மேல கோபம் ஆயிட்டாங்க, கம்மல் ஏதோ ரவுடியை அனுப்பி வைத்துவிட்டான், அவனுக்கும் எங்களுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கிறதுனால அவன் பண்ணி இருப்பான்னு சந்தேகப்படுறாங்க, அதற்கு எதிரே உள்ள நபர் கம்மலுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை, இல்ல அண்ணே வந்தாரே அண்ணன் கூட நீங்க வந்தீங்க என்னன்னு சொல்லாம வா கூட்டிட்டு வந்தாரு, எனக்கே தெரியாது அதனாலதான் தினேஷ்கிட்ட சொல்ல சொல்லி இருந்தேன்.

ரவுடிகள் குறித்து உலா வரும் ஆடியோ லிங்

4

அப்புறம் ஒரு நாள் தில்லைநகர் ல டாக்டர் கார்த்தியோட பார்த்திருந்தேன், பேசிக்கிட்டு இருந்தீங்க அப்ப அவரோட தான் லிங்க்ல இருந்தீங்கன்னு கேள்விப்பட்டேன். அதுவா கொஞ்ச நாளு கருணாஸ் சாதி சங்க மீட்டிங்கில் பேசுறதுக்கு போவேன் ரொம்பலாம் இல்ல அப்புறம் பொம்பள மேட்டர்ல்ல ஸ்பா ரைடுன்னு நம்மள இழுத்து விட்டுட்டாங்கே.. அதோட அவ்வளவுதான் அப்ப மணிகண்டன் ஏசி கூட நம்பல ரொம்ப டைட் பண்ணா புள்ள அப்புறம் அமைச்சர் வச்சு பேசி அவர லூஸ் பண்ணி விட்டேன் இனிமேலு கேஸ் எடுக்க கூடாதுனு அமைச்சர் சொல்லிட்டாரு அவர்கிட்ட..

இப்போதைக்கு தம்மு மட்டும் போய்கிட்டு இருக்கு வீட்டுல கவர் மட்டும் அப்படியே அத பாத்துட்டு இருக்கேன் இன்னும் ஆறு மாசத்துல எனக்கு கல்யாணம் பிரதர் அதான் நாம்ப யாரு சண்டைக்கு போறதில்ல அப்படியே ஒதுங்கி வந்துட்டேன். அதற்கு எதிரே உள்ள நபர் எல்லாம் எனக்கு தெரியும் எல்லாத்தையும் விசாரித்து விட்டேன் பசங்க தான் நீங்க டாவு ஓட்டிட்டு இருக்கீங்க, மசாஜ் நடத்திக்கிட்டு இருக்கீங்க, பசங்களை வச்சி வேலை வாங்கி கிட்டு இருக்கீங்க, கவர் ஓட்டுறதுன்னு எல்லா வேலையும் பார்க்கிறீங்கனு சொன்னாங்க.. அப்புறம் வந்த உடனே தான் தெரியுது ஆஹா இது நாம்ப ஆல்ரெடி வந்த வீடாச்சுனு.. அப்புறம் தீபக் நம்பர் என்கிட்ட இல்ல, இல்லனா அழைச்சிட்டு கூட வந்திருப்பேன், அதனாலதான் உங்க கிட்ட பேசறப்ப குமாரு பேசறன்னு சொல்லிட்டு வச்சேன்.. அப்புறம் எப்படி நம்பர் வாங்கினீங்க வேற ஒரு சென்டர்ல உள்ள பையன் மூலம் வாங்கினேன்.. சரி சரி.. நீங்களாச்சும் அண்ணன் கிட்ட சொல்லி இருக்க கூடாதா ஸ்பாலாம் ஓட்டுறது இல்லன்னு நேரா வீட்டுக்கு வந்து ஜாமா ஏதும் எடுக்க வேணாம்னு சொல்லி இருக்காரு.. அதற்கு அதான் நீங்க செல்வகுமார் அண்ணே வச்சி பேசுறேன்னு சொன்னீங்களே நைட்டே பேசி இருக்கலாம்ல்ல எல்லாரையும் அண்ணனுக்கு தெரியும், அதான் நைட்டு திண்டுக்கல் வக்கீல் மோகன்ராம் கிருஷ்ணா பேசினாரு துரை பேசினாரு அட்டாக் பாண்டி ஜெயிலிலிருந்து பேசினா புள்ள பிரச்சனை என்னைய போட ஆளு அனுப்பிட்டாங்க என்னோட ஆப் நண்டு கம்மல் என்னைய 307 போட ஆள் செட் பண்ணி பணம் கொடுத்திருக்கிறாரு, அந்த 307 பண்ணுற ஆளு இன்னொரு ஆள் கிட்ட போயி சொல்லி இருப்பான் போல அவன் தேன் கூட்டில் கை வைக்குற மாதிரி கொத்தி எடுத்துருவண்டா, சொல்ல அப்புறம் சமாதானமாகி விஷயத்தைச் சொல்கிறான். இப்பதான் ஜெயிலிலிருந்து வெளியில வந்து இருக்கான் பொன்மலை காரன் அப்புறம் எல்லாத்தையும் சமாதானபடுத்தி வச்சிருக்கேன்.

உலா வரும் ஆடியோ லிங்

இதற்கு இடையில சாமி ரவி அண்ணன் மேட்டர் வேற போயிட்டு இருக்கு அதான் கோடி மேட்டர் இருக்குல அதனால எதுக்கு வந்து இருக்கீங்க ஸ்பா மேட்டரா வா இல்ல ரவி என்ன மேட்டரா வா தெரியல நேற்றிலிருந்து வெளியில போக முடியல ஏரியா ஃபுல்லா அசிங்கம் ஆயிடுச்சு அண்ணன் வந்தவரு எனக்கு ஒரு போன் அடிச்சி இருக்கலாமே, நீ நைட்டு பேசி இருக்கலாம்ல, நான் பேசினேன் யாரோ பெரிய ஆளு விட்டு பேசுறதா சொன்னியே நான் பெரிய ஆளுன்னு சொன்னது குணா ஜி பேச சொல்லலாமே இருந்தேன். அதற்கு அந்நபர் யோவ் நான் ஜி கூட தானே இருக்கோம்.. என்னையா எல்லாரையுமே தெரியும்னு சொல்லுற சுச்சுவேஷன் தெரியாம உங்க ஊரு பாண்டி அண்ணே ஜி கூடாதா இருக்காரு

ஆமா எந்த ஜெயில்ல இருக்காரு ஜெயிலா பாண்டி அண்ணன் வெளியில இருக்காரு ஜி எந்த ஜெயில்ல இருக்காரு கேட்டேன், மதுரையில இருக்காரு
கேட்டுப்பாருங்க நான்லாம் உங்களுக்காக நிறைய வேலை பார்த்திருக்கேன்.. ஃபுல்லா உங்க ஆளுங்க தான் என்கிட்ட லிங்க்ல இருப்பாங்க என்று பேசப்பட்ட ஆடியோ திருச்சியை பதற வைக்கும் விதமாக பரவிவருகிறது.

ஏற்கனவே சாமி ரவி, உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரணம் பணம் கொள்ளை அடித்த வழக்கு மட்டுமல்லாது சாமி ரவி மீது திருச்சி அமைச்சர் கே என் நேரு வின் தம்பி ராமஜெயம் மர்மக் கொலை என கே கே நகர் கடலூர், காரைக்கால் என பார்டர் தாண்டிய கொலை வழக்குகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் 2 ஆசாமிகள் பிரபல ரவுடிகளுக்கு இணக்கமாக அவர்கள் செய்யும் வேலை எல்லாம் தெரிந்து கொண்டே உதவி வருவது போலீசார் கண்ணில் மண்ணைத் தூவும் விதமாக செயல்பட்டு வருவது மத்திய மண்டலத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

ஜித்தன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.