எல்பினில் கட்டிய பணத்தை திரும்ப கேட்டு நள்ளிரவு வரை தர்ணா பண்ணிய போலிஸ் ஜெயலெட்சுமி..

0

எல்பினில் கட்டிய பணத்தை திரும்ப கேட்டு நள்ளிரவு வரை தர்ணா பண்ணிய போலிஸ் ஜெயலெட்சுமி..

கடந்த சில நாட்களாக திருச்சி மன்னார்புரத்தில் இயங்கி வரும் எல்பின் நிதி நிறுவனம் மீது பல்வேறு மோசடி புகார்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும்/ மாநகர காவல் நிலையங்களிலும் வந்து குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் புகார்கள் வரவர வரவேற்கும் விதமாக தருகிற புகார்களை ஏற்பதும் மேற்கண்ட நிறுவனம் மீதும் அதன் உரிமையாளர் மீதும் எஃப்.ஐ.ஆர் போடுவதுமாய் இருந்து வருகின்றன. ஏற்கனவே திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சம்பந்தப்பட்ட எல்ஃபின் நிறுவனம் மீது புகார்கள் பண்டல் பண்டலாக கடந்த ஆண்டுகளிலிருந்து வர புகார்களை வைக்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போது மாநகர காவல் நிலையத்திற்கு ஏமாற்றமடைந்த நபர்கள் ஒவ்வொருவராக படையெடுத்து வந்து புகார்களை அளித்து கொண்டிருக்கின்றன.

 

- Advertisement -

- Advertisement -

இந்நிலையில் 24/06/2021 அன்று இரவு 9 மணி அளவில் திருச்சி எல்ஃபின் அலுவலகம் முன்பு ஒரு பெண் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கண்டோன்மெண்ட் காவல்நிலைய போலீசார் மேற்கண்ட பெண் யாரென்று விசாரிக்கும்போது பிரபல போலிஸ் புகழ் சிவகாசி ஜெயலட்சுமி என தெரியவந்தது.

4 bismi svs

யார் இந்த ஜெயலட்சுமி?

2000-2001 காலகட்டங்களில் தமிழக செய்திதாளில் பெருமளவு பேசப்பட்ட முக்கிய பெண் இவரால் பல காக்கிகள் காணாமல் போகியுள்ளனர். அதில் பிரபல டிஎஸ்பி பெயரும் அடிபட்டது..

ஜெயலட்சுமி திருச்சி எல்ஃபின் நிறுவனத்தில் சுமார் ஒரு கோடிக்கும் மேல் பணம் முதலீடு செய்திருப்பதாகவும், சமீபகாலமாக இதன் நிறுவனர் எல்ஃபின் ராஜா எனக்கான பணத்தை அளிக்காமல் ஏமாற்றி வருவதாக கூறி சம்பந்தப்பட்ட ராஜா வரும்வரை அலுவலகம் வாசலிலே காத்திருப்பேன் என்று தான் வந்த கார் டிரைவருடன் சாலையில் வெகுநேரமாக அமர்ந்து காத்திருந்தார். பின்னர் ஜெயலட்சுமியிடம் கண்டோன்மெண்ட் காவல்நிலைய போலீசார் பேச்சுவார்த்தைக்கு வர ஒரு கட்டத்தில் போலீசாரிடமே தூக்கி அடித்தபடி சிவகாசி பட்டாசாய் பேசிய ஜெயலட்சுமி பின்னர் 12 மணிக்கு மேலே ஆனதால் போலீசாரிடம் நாளை காலை கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வருகிறேன். என்னுடைய பணத்தினை எனக்கு பெற்றுத் தரவேண்டும் என்று கூறியபடி தான் வந்த வெள்ளை நிற காரில் பந்தாவாக ஏறி சென்றார்..

இச்சம்பவத்தால் மாநகர இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் உதவி ஆணையர், பெட்ரோல் வாகன காவலர்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் சம்பந்தப்பட்ட ஜெயலட்சுமியை காலையில் வர வச்சாச்சு என்று பெருமூச்சு விட்டனர்.

ஜித்தன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.