தஞ்சை பாமக நிர்வாகியை கொல்ல திட்டம்..முக்கிய குற்றவாளி நள்ளிரவில் கைது

0

தஞ்சை பாமக நிர்வாகியை கொல்ல திட்டம்..முக்கிய குற்றவாளி நள்ளிரவில் கைது..

தஞ்சை மாவட்ட பாமக நிர்வாகியை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை நள்ளிரவு தனிப்படை போலீசார் தூக்கினர்.

பாமக நிர்வாகி ம.கா.ஸ்டாலின்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மேலமருத்துவக்குடியை சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்டத்தில் முக்கிய மூத்த அரசியல்வாதியாக வலம் வருபவர், தற்போது வன்னியர் சங்க மாநிலத் துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13/06/2021 திருவிடைமருதூர் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் ம.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அவரை வெளியே எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும் சமூகவிரோதிகள் உங்களை கொல்ல திட்டம் தீட்டி உள்ளார்கள். என்று சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளதையடுத்து அதில் சிலரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். என்று கூறியுள்ளார்.

அதன்மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவகுடி, ஆடுதுறை, போன்ற பகுதிகளில் செக்போஸ்ட் உடன் பலத்த போலீசார் குவிக்கப்பட்டு அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ம.க.ஸ்டாலின் தம்பி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ம.க.ராஜா என்பவரை சில கூலிப்படை கும்பல் கொலை செய்தது.
அதுதொடர்பாக சில சமூக விரோதிகள் கூட்டம் இன்னும் ம க ஸ்டாலின் மற்றும் அவரை சார்ந்தவர்களையும் கொலை செய்ய திட்டமிட்டு இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தற்போது கூட கொலை செய்ய ஒரு கூலிப்படை டீம் நாட்டு வெடிகுண்டுகளுடன் துப்பாக்கிகளுடன் சுற்றி வந்துள்ளதை ரகசியமாக கண்டறிந்த தனிப்படை போலீசார் 13/06/2021 மகேஸ் மற்றும் அவரது நண்பர்கள் செந்தமிழ்ச்செல்வன், முகம்மது ஆசிக் பாலமுருகன் மணிகண்டன் ஆகியோரை ஆயுதங்களுடன் கைது செய்தனர்.

கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கூலிப்படைகள்

இந்நிலையில் பிடிபட்ட நபர்களை போலீசார் ரகசியமாக வைத்து விசாரணை நடத்திவந்தனர் தனிப்படை போலீசார்.. விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியதுடன் பாமக பிரமுகர் மா.க.ஸ்டாலினை கொள்ள திட்டம் தீட்டியது யார்? எதற்காக திட்டம் தீட்டினார்கள் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது. அதில் சம்மந்தப்பட்ட லாலி மணிகண்டன், மகேஷ், செந்தமிழ் செல்வன், முகமது ஆசிக், பாலமுருகன், மணிகண்டன், ஆகியோருடன் தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் பெயரும் அடிபட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மேற்கண்ட நபர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் பிடிகொடுக்காமல் இருந்து வந்த பாமக நிர்வாகி வெங்கட்ராமன் நேற்று 25/06/2021 நள்ளிரவு 2:00 மணி அளவில் அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்ய திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி வெங்கட்ராமன்

தஞ்சை மாவட்ட கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர் பட்டாளங்களுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் ம கா ஸ்டாலின் சமீபத்தில் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து கட்சி பிரமுகர்களை கொண்டு ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர், இதனால் சுற்றுவட்டார பகுதியில் இவருடைய பெயர் பெருமளவு பதிய பெற்றதாக இருந்துவருகிறது.. இதனால் கட்சிப் பொறுப்பில் இருக்கும் சிலருக்கு இவருடைய வளர்ச்சி பொறுக்காமல் இருந்துவந்துள்ளது. எனவே கட்சியில் உள்ள சிலர் ம க ஸ்டாலினை நேரடியாக எதிர்க்க முடியாத காரணத்தினால் அவரைப் பற்றி கட்சி மேல் இடங்களில் புகார் கூறுவது என்று இருந்து வந்த நிலையில் கூட இருந்துகொண்டே சிலர் ஏற்கனவே உள்ள பகையை வைத்து முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று எண்ணி இதுபோன்ற கொலை முயற்சி செய்ய ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்கட்சிக்குள் நடக்கும் உள்ளடி வேலையில் பதவிக்காக கொலை செய்யும் அளவிற்கு அரசியல்வாதிகள் அரசியல் செய்ய ஆரம்பித்த நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒருபுறம் சாதிக்கான அரசியலில் கொலைகள் நடந்தது போக, இப்போது பதவிக்கான அரசியலில் கொலைகள் செய்யும் அளவிற்கு வளர்ந்து கொண்டு வருவது சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் உரிய நேரத்தில் காவல்துறை, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.

-ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.