மாநகர போலீசின் பெருமையை மீட்டுக் கொடுத்தவர் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சென்னை கமிஷ்னரேட்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் கமிஷனர்களாக கால் பதித்து சென்றிருக்கிறார்கள். கடமை உணர்வுமிக்கவர்கள் , கை சுத்தமில்லாதவர்கள்,  நேர்மையானவர்கள்,  நிலை தடுமாறியவர்கள் , அடிபணியாத வணங்காமுடிகள்,  அரசியல்வாதிகளின் கைப்பாவைகள்   சபலத்தில் சறுக்கி விழுந்து சீரழிந்தவர்கள்,  சகலகலா வல்லவர்கள் என்று  ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடி உள்ளது.

அதில் விஜயகுமாரின் பதவி காலம் பொற்காலம் என்றே வர்ணிக்கப்பட்டது. வீர ,  தீர செயல்களுக்கும்,  விவேகத்திற்கும் மறுபெயர் இந்த முன்னாள் மாநகர கமிஷ்னர். மடிந்துவிட்ட மாநகர போலீசின் பெருமையை மீட்டுக் கொடுத்த மாமனிதன்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

டம்மியான பதவி ,  சிறந்த சென்சிடிவான பதவி  என்றெல்லாம் தரம் பிரித்து பாராமல் , எங்கு போஸ்டிங் செய்யப்பட்டாலும் தன் சிறந்த செயல்பாடுகளால் சென்ற இடத்தை சென்சிடிவானதாக மாற்றி காட்டும் மாமனிதன் இவர்.

சென்னை மாநகர கமிஷனாக இருந்தபோது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளிலும்  , தாதாக்களை தகனம் செய்வதிலும் இவர் காட்டிய வீரதீர சாகசங்கள் இன்று வரை மாநகர மக்களின் மனதை விட்டு மறையாது. தீய சக்திகளிடம்  துப்பாக்கியால் மட்டுமே பேசி பழக்கப்பட்டவர். தேவாரத்தை அடுத்து THE TRIGGER HAPPY MAN  என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டவர் விஜயகுமார் மட்டுமே.

விஜயகுமார்
விஜயகுமார்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வீரப்பன் ஆபரேஷனில் தங்கள் விதியை முடித்துக் கொண்ட 44 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த வெற்றியின் மூலம் வீரவணக்கம் செலுத்தி இருக்கிறார் விஜயகுமார்.

ஒரு நிலையில் , தமிழகத்தில் தாண்டவமாடிய   அரசியல் நெருக்கடிகளால் மனம் வெறுத்து,  மத்திய அரசின் டெபுடேஷனில் சென்று விட்டார். சென்ற இடமும் மிக மிக சென்சிட்டிவான  CRPF. ஆனால் CRPF பிலும் இவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. சத்தீஸ்கரில்  மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் உச்சத்தில் இருந்த காலம் அது.

இங்கு பதவியில் அமர்ந்த குறுகிய நாட்களுக்குள் CRPF பின்  Structure யே மாற்றி எழுதி விட்டார். இவரது எளிமையும் , அன்பான , ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறையையும்  கண்டு CRPF குடும்பமே அன்று சந்தோஷத்தில் திக்கு முக்காடியது.

பந்தாவுக்கும், ஆர்ப்பாட்டத்திற்கும் அப்பாற்பட்டவர். சிப்பாய்களோடும் சரிசமமாக அமர்ந்து சாப்பிடுவார். பணி மூப்பில்  இவருக்கு ஓய்வு கொடுத்தாலும்  சர்வீசை விட்டு  இவர் விலகினாலும், இவரது புகழலைகள் என்றும் ஓய்வதில்லை.

—  இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.