கால்ஷீட்டில் பிசியான உதயநிதி – விரைவில் முழு நேர அரசியல் !
கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலே உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார். தேர்தலில் வெற்றிக்குப் பிறகு கொரோனா கால பணி, பிறகு தொகுதி பணி என்று அரசியலில் மிகவும் பிசியாக இருந்த உதயநிதி தற்போது தனது தொழிலிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.
பல்வேறு படங்கள் கைவசம் இருக்கும் நிலையில் ஒவ்வொரு படங்களுக்கும் கொடுத்த கால்ஷீட்டை முடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்படி உதயநிதி ஸ்டாலின் ஷூட்டிங்கில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கால் சீட்டுகள் அனைத்தும் முடிந்த பிறகு உதயநிதி முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று அறிவாலய உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.
முழு நேர அரசியல் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இன்னும் சிறிது மாதங்களில் உதயநிதி அமைச்சரவையில் இடம் பெறுவார்.
அப்போது முக்கிய இலாக்கா உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கக்கூடிய முக்கிய உடன்பிறப்புகள் கூறினர்.