பாமகவின் அதிரடி மாற்றம் ; துணைப் பொதுச் செயலாளர் பதவி நீக்கம் – மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம் !

0

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக எதிர்பார்த்த இடங்களை விட மிகக் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறது. 7 மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் தான் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பாமக விற்கு எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், அக்டோபர் 16 அன்று பாமக வின் பொதுக்குழு கூட்டம் இணைய வழியாக நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் மாவட்டங்களை வழி நடத்த மாநில துணை பொது செயலாளர் என்ற பதவி இடையூறாக இருப்பதாகவும் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பிற கட்சிகளை போல மாவட்டங்களுக்கான பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அந்த மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சி சாத்தியமாகும் என்று முடிவு செய்யப்பட்டு, பாமக பைலாவில் விதி எண் 10 -யை திருத்த முடிவு செய்யப்பட்டது.

இப்படியாக பாமகவில் இனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களே அமைப்பு ரீதியான, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை பார்ப்பார்கள் என்றும். மாவட்டத்தை வழிநடத்த இதுவரை இருந்த மாநில துணை பொது செயலாளர்கள் பதவி விலக்கிக்கொள்ள படுவதாகவும், மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்கும் வரை பழைய முறையில் செயல்பாடுகள் இருக்கும் என்றும் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் அதிகாரத்தில் மாவட்டங்கள் வரும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் இனி பாமகவின் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் மாவட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.