தயாராகும் பட்டியல் – தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை – பயத்தில் அதிகாரிகள்!
தமிழ்நாடு காவல்துறை தன்னுடைய அடுத்த பரிணாமத்தை நோக்கி நகருகிறது என்று சொல்லும் அளவிற்கு தற்போது லஞ்சம், ஊழல் போன்றவற்றை தடுக்க தமிழ்நாடு காவல் தலைமையகம் சிறப்பு பட்டியல் ஒன்றை தயார் செய்து வருகிறதாம். அந்த பட்டியல் தான் தற்போது தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கரப்ஷன் அதிகாரிகளை கலங்க அடித்து இருக்கிறதாம்.
தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளில் கீழ் மட்ட ஊழியர்கள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அவரவர் தகுதி அடிப்படையில் எவ்வாறு லஞ்சம் வாங்குகிறார். இப்படி எந்தெந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறாக லஞ்சம் கைமாறுகிறது. மேலும் எவ்வளவு லஞ்ச தொகைகள் கைமாறுகிறது. ஒரு காவல் நிலையத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு லஞ்ச பணம் புழக்கம் ஆகிறது. மேலும் கரப்ஷன் பட்டியலில் இருக்கக்கூடிய அதிகாரிகளின் பெயர் மற்றும் விவரம் என்று முழு தகவல்களையும் ஒவ்வொரு மாவட்ட வாரியாக தனித்தனியாக முழு விவரமாக கேட்டிருக்கிறது காவல்துறையின் தலைமையகம்.
இந்தத் தகவல் ஒவ்வொரு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு சென்றவுடன் அவர்கள் இதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதைக் கேள்விப்பட்ட கரப்ஷன் காவலர்கள் தற்போது கதிகலங்கி இருக்கிறார்களாம்.
தமிழ்நாடு காவல்துறையின் தலைமையகம் இந்த பட்டியல்கள் அனைத்தையும் முழுமையாக பெற்ற பிறகு அதிரடி நடவடிக்கை செய்ய காத்திருக்கிறதாம்.