திருச்சி: போலீசுக்கு டப் கொடுக்கும் ரவுடிகள்- பதற்றத்தில் மாத்தூர்.
திருச்சி: போலீசுக்கு டப் கொடுக்கும் ரவுடிகள்- பதற்றத்தில் மாத்தூர்.
திருச்சி மாநகர மாவட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரவுடிகளின் அட்டகாசம் என்பது குறைந்த நிலையில் உள்ளது.
காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல்துறை மூலம் சமீபத்தில் 950 க்கும் மேற்பட்ட ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதில் 450-க்கும் மேற்பட்ட ரவுடிகள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆக கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொலை கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடையோர் ஒன்று கூடும் இடமாக சிறை அமைந்துவிட்டதால்,
தங்களது புதிய திட்டங்களை தீட்டுவது அதற்கான வழி வகையும் ஏற்பட்டுவிட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் சில முக்கிய குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் ஜாமினில் வெளிவந்து இருப்பதாகவும், மேலும் பலர் ஜாமினில் வெளி வருவதற்கு முயற்சிப்பதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன் புதுக்கோட்டை மாவட்ட மாத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்,
மாத்தூரில் கடைத்தெரு அருகே திமுக பிரமுகர் பாலச்சந்தர் என்பவரை அவரது திருமணத்திற்கு முதல் நாள்( தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்)
9 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் வீட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பாலச்சந்தரின் இறுதி ஊர்வலமானது, மிகப்பெரிய படை பட்டாளத்துடன் சென்றது.
அப்போது பாலச்சந்தரின் கூட்டாளிகள் சிலர் ரத்தத்தின் ரத்தமே என்று தனது கைகளை கத்தியால் வெட்டி, இறுதிச்சடங்கில் சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்குவதாக கூறி சபதம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்து 1 வருடத்தை கடந்த நிலையில் தற்போது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒன்பது பேரும் ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இறந்து போன பாலசந்தர் திமுக பிரமுகர் மட்டுமல்லாது பிரபல ரவுடி பட்டரை சுரேஷின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.
மேலும் திருச்சி மாநகர பகுதியில் பொன்மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்கண்டார் கோட்டை, பொன்மலைப்பட்டி போன்ற பகுதிகளில் முன்விரோதம் காரணமாக, கடந்த இரண்டு வருடமாக கொடூர கொலைகள், அதற்கு பதிலுக்கு பதிலாக கொலைகள் நடந்து வருவதுமாய் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் ஜாமினில் வெளியே வந்திரப்பதாகவும், பதிலுக்கு பதில் கொலை சம்பவம் நடப்பதற்கு பிரச்சனை போய்க் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்விரு குற்ற சம்பவங்களுக்கும் சம்பந்தப்பட்ட உளவுத்துறை போலீஸ் சரியான தகவல் கொடுக்காமல் இருப்பதே காரணம் என்கின்றனர்.
இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று காவல்துறை வட்டாரங்கள் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போய் நிற்கின்றனர்.
-இந்திரஜித்