2 இடங்களில் ஓட்டுப்போட்ட தி.மு.க.பெண் கவுன்சிலருக்கு எதிராக திருச்சி கோர்ட்டில் வழக்கு !
2 இடங்களில் ஓட்டுப்போட்ட
தி.மு.க.பெண் கவுன்சிலருக்கு எதிராக திருச்சி கோர்ட்டில் வழக்கு
திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த கவிதா பெருமாள் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 19.02.2022-ம் தேதி நடைபெற்று முடிந்த தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 56-வது வார்டில் நான் தீப்பெட்டி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டேன்.
அந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளராக பாலசுப்பிரமணியன் மனைவி மஞ்சுளா தேவி என்பவர் 56-வது வார்டு தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர் 56-வது வார்டுக்குட்பட்ட கருமண்டபம் ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடி பாகம் 646 மற்றும் 647 ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கள்ள ஓட்டுகள் போட்டதோடு மட்டுமல்லாமல் 56-வது வார்டுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அவரது ஆதரவாளர்களால் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு மஞ்சுளா தேவி வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நான் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். மஞ்சுளா தேவி கள்ள ஓட்டு போட்டதால் அவர் வசிக்கும் கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரியும், அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரியும், இரண்டாம் இடம் பிடித்துள்ள என்னை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு விரைவில் விசாரணைக்கு வருகிறது.