திருச்சி பிரபல பள்ளி மாணவன் தற்கொலை ! கடிதம் சிக்கியது !
திருச்சி பிரபல பள்ளி மாணவன் தற்கொலை ! கடிதம் சிக்கியது !
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராணி அம்மாள். திருநங்கையான இவர் மதன்குமார் (வயது 18) என்பவரை சிறுகுழந்தை முதலே தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
மதன்குமார் வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரமால் விடுமுறை எடுத்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் தரப்பில் மாணவனையும் , பெற்றோரையும் அழைத்து கண்டுத்துள்ளனர்.
மதன்குமார் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த எல்லோரும் வீட்டிற்கு அழைத்து சென்று அவரை திட்டியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த மதன்குமார் 12.03.2022 அன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முதல்கட்ட விசாரணையில் மதன்குமார் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கடிதத்தில்…
நா நல்ல பையன் கிடையாது அதுபோல இந்த மரணத்திற்கு யாரும் வருத்தப்பட வேண்டாம். நன்றி…
என்று எழுதியுள்ளார்.

மாணவர் மதன்குமார் பள்ளியில் சிறப்பாக நடனமாடுவார் என்றும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பள்ளியின் சார்பில்கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார் என்று சக மாணவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.