அதிரவைக்கும்  அங்குசம் செய்தி – மூத்த பத்திரிகையாளர் இதழ் குறித்த விமர்சனம் !

0

அதிரவைக்கும் – அங்குசம் செய்தி 

 

திருச்சியில் இருந்து வெளிவரும் ” அங்குசம் செய்தி ” இதழ் புரட்டினால் வியப்பு, அதிர்ச்சி.

சென்னையில் இருந்து வருகிற புகழ்பெற்ற இதழ்களில் இல்லாத ஆழமான , கருத்துள்ள செய்திகள். சார்பற்ற தன்மை.

அரசியல் இதழா ? புலனாய்வு இதழா ? சமூதாய இதழா ? சினிமா உள்பட எல்லாம் இருக்கிறது.

அகில இந்தியச் செய்திகளும் இருக்கிறது. சில ரகசியங்கள் வெளிவருகின்றன. பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த ஜெ. ஜான் டேவிட் ராஜ் ( Jdr ) இதன் ஆசிரியர் . வரிக்கு வரி தெளிவு

மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் ஆறுமுகம்
மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் ஆறுமுகம்

புதுவகையான செய்தி சேகரித்து வெளியிடும் உத்தி. பல கேள்விகள். பல உண்மைகள். பல எச்சரிக்கைகள்.

பாமரர்கள் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை எல்லோரும் கவனிக்க வேண்டிய இதழாக ” அங்குசம் செய்தி ”

வீடு, மனை வாங்க சில ஆலோசனைகள். கண்ணியமான அரசியல் விமரிசனங்கள். விவசாய ஆலோசனைகள். ரஷ்யா, உக்ரைன் போர்ச் செய்திகளும் உள்ளன. திருச்சி சபரி மில் தொழிலாளர் போராட்ட விபரம்.
ஃபேன்டசி செக்ஸ் என்றால் என்ன ? ஒரு அலசல். இதழைப் படித்தால் திகைப்பு,

மனநிறைவு. வெறும் 15 ரூபாய் விலையில் . அன்பு நண்பர்களே கடைகளில் தேடி வாங்கி படியுங்கள். நீங்களும் இதனை உணருவீர்கள்.

ஒரு பத்திரிகையாளனாகப் பெருமை கொள்கிறேன். பாராட்டுகிறேன்.

 

ஜவஹர் ஆறுமுகம் 

மூத்த பத்திரிகையாளர்

 

 

Leave A Reply

Your email address will not be published.