தலை முடி சாப்பிடும் வினோத மனநோய் பள்ளி மாணவி !

அறுவை சிகிச்சை மூலம் 25 சென்டிமீட்டர் முடியை அகற்றிய அரசு மருத்துவர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தலை முடி சாப்பிடும் வினோத மனநோய் பள்ளி மாணவி

 

முடியை சாப்பிடும் வினோத மனநோயால் பாதிக்கப்பட்ட மாணவியின் வயிற்றில் இருந்து தலைமுடி, நூலை திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

தீபாவளி வாழ்த்துகள்

திருச்சி மாவட்டம் லால்குடியில் வசிக்கும் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. திடீரென வயிற்று வலி அதிகமாகி வாந்தி எடுத்ததால் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 12-ந்தேதிஅனுமதிக்கப்பட்டார்.

வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட தலைமுடி
வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட தலைமுடி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அவரை முழுமையாக பரிசோதித்த மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அம்மாணவிக்கு நீண்ட நாட்களாக தலைமுடி மற்றும் நூல் ஆகியவற்றை சாப்பிடும் வினோதமான மனநோய் இருப்பதை கண்டறிந்தனர்.

மாணவிக்கு சி.டி. ஸ்கேன், என்டோஸ்கோபி போன்ற உயர் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது மாணவியின் வயிற்றில் தலைமுடி திரண்டு மிகப்பெரிய முடி கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு “ராப்புன்சல் சிண்ட்ரோம்” என்று பெயர்.உலக அளவில் இதுவரை 68பேர்களுக்கு மட்டுமே இந்த வினோத நோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா அறிவுறுத்தலின்படி முடிகட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

கடினமான இந்த அறுவை சிகிச்சையை, அறுவை சிகிச்சை டாக்டரும், பேராசிரியையுமான மகாலட்சுமி அசோக்குமார், உதவி பேராசிரியர் டாக்டர் உமா, மயக்கவியல் டாக்டர்கள் சந்திரன், பாலசுப்பிரமணிய குகன் ஆகியோர் கொண்ட டாக்டர் குழுவினர் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஏகநாதன் மற்றும் மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் சிவக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் தொடர்ந்து 4 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு முடிகட்டியை வெற்றிகரமாக அகற்றினர். பொதுவாக வயிற்றுப் பகுதியில் மட்டுமே இருக்கும் இந்த முடிகட்டி, சுமார் 25 சென்டி மீட்டர் நீளத்திற்கு மாணவியின் சிறுகுடல் வரை பரவி இருந்ததாலும், அந்த முடிகட்டி சிறுகுடலை அழுத்தி ஓட்டை விழும் அளவிற்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததாலும் இந்த அறுவை சிகிச்சை மிகவும் கடினமான ஒன்றாக இருந்ததாக டாக்டர் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் மாணவிக்கு மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு சமீபத்தில் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.3 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த உயர் அறுவை சிகிச்சை கட்டணம் இல்லாமல் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.