திருச்சி மாநகராட்சியில் 13 வார்டுகளில் டெபாசிட்டை இழந்த அதிமுக !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சி மாநகராட்சியில் 13 வார்டுகளில்

டெபாசிட்டை இழந்த அதிமுக !

 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகளில் அதிமுக 64 வார்டுகளில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதிமுக போட்டியிட்ட 64 வார்டுகளில் 14, 37, 65 ஆகிய 3 வார்டுகளில் மட்டும் வெற்றியை பெற்ற அதிமுக மற்ற வார்டுகளில் தோல்வியை சந்தித்தது. அதிலும் 13 வார்டுகளில் அதிமுக டெபாசிட்டை இழந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

9வது வார்டில் திமுக வேட்பாளர் நாகலட்சுமி 5720 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கச் செய்தார்.

3

10 வது வார்டில் போட்டியிட்ட முத்துக்குமார் 4718 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்தார்.

13 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமேகலை 3695 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கச் செய்தார்.

4

16 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மதிவாணன் 4427 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு செய்தார்.

22வது வார்டு திமுக விஜயலட்சுமியும் 4128 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கச் செய்தார்.

26வது வார்டில் திமுக தலைவர் விஜயலட்சுமி 3265 எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்தார்.

27வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அன்பழகன் 5430 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க செய்தார்.

36 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 4007 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கச் செய்தார்.

52 வது வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி 4426 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்தார்.

57வது வார்டு தி மு க வேட்பாளர் முத்து செல்வம் 6242 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கச் செய்தார்.

59வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கீதா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தை, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8 வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்தார்.

60வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காஜாமலை விஜய் 4198 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்தார்.

64 ஆவது வார்டு திமுக வேட்பாளர் மலர்விழி 3073 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு 5 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்தார்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.