இணையதளம் to அச்சு ஊடகமாக அங்குசம் செய்தி இதழ் வெளியீடு
இணையதளம் to
அச்சு ஊடகமாக அங்குசம் செய்தி இதழ் வெளியீடு
இணைய இதழாக பல லட்சக்கணக்கான வாசகர்களை பெற்ற அங்குசம் செய்தி இதழின் புத்தக வடிவம் கடந்த ஜனவரி 25 முதல் மக்கள் கரங்களில் தவழ்ந்து வருகிறது.இதழினை திராவிட இயக்க முன்னோடி புலவர் முருகேசன் அவர்கள் வெளியிட, தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாள ̃ ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இதழை வெளியிட்ட புலவர் முருகேசன் அவர்கள் பேசுகையில் எவ்வளவுதான் நாம் செய்தியை சொன்னாலும் அது பதிவாகிவிட்டால் அடுத்த தலைமுறைக்கும் அந்த செய்தி நிலைக்கும். இந்த இதழின் பெயர் தேர்வே நன்றாக உள்ளது. தமிழக அளவில் வரவேற்கக் கூடிய இதழாக இது வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இந்நிகழ்வில் மிசா சாக்ரடீஸ் மற்றும் பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவினர், செய்தியாளர்கள், அலுவலக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.