ஜில்லுன்னு சினிமா….
கஸ்தூரி ராஜாவின் களியாட்டம்
ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ‘காசு பணம் துட்டு’ என்ற பெயரில் ஒரு படத்திற்குப் பூஜை போட்டார் தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜா. படத்தின் ஹீரோக்களாக நான்கு புதுமுக இளைஞர்களை அறிமுகப்படுத்துவதாகச் சொல்லி, பணக்கார வாலிபர்கள், சில மார்வாடி இளைஞர்களிடம் சிலபல லட்சங்களை அள்ளினார் கஸ்தூரிராஜா. அதே போல் நான்கு இளம் பெண்களை (வயது 18-லிருந்து 22 வரை மட்டுமே) ஹீரோயின்களாக அறிமுகப்படுத்துவதாக சொல்லி, புரோக்கர்கள் மூலம் பல டீன் ஏஜ் இளசுகளை வரவழைத்து, அதிலிருந்து நான்கு இளசுகளை செலக்ட் பண்ணிய கஸ்தூரிராஜா, பெருந்தன்மையாக அவர்களிடம் பணம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.
அடடே அப்படியான்னு.. கஸ்தூரிராஜாவின் பெருந்தன்மையை நினைத்து நீங்கள் வாயப்பொளக்க வேண்டாம். இளைஞர்களிடம் பணம் என்றால், இளைஞிகளிடம் ‘மணம்’ நுகர்ந்து துள்ளி விளையாடும் பழக்கம் உள்ளவர் தான் இந்த கஸ்தூரிராஜா. இப்படியெல்லாம் சேட்டை ராஜாவான கஸ்தூரிராஜா, ‘காசு பணம் துட்டு’ படத்தை இதுவரை ஸ்டார்ட் பண்ணவேயில்லை.
அதற்கடுத்த சங்கதி. நான்கு வருடங்களுக்கு முன்பு இந்தி ஹீரோ ஜாக்கி ஷெராப், நிகிஷா பட்லேல், மேஹாலி ஆகியோர்களை வைத்து ‘பாண்டிமுனி’ என்ற படத்தை ஸ்டார்ட் பண்ணி, சில நாட்கள் ஷூட்டிங் நடத்தி டீசர் ரிலீஸ் விழாவும் நடத்தினார் கஸ்தூரிராஜா. அகோரி சாமியார் கெட்டப்பில் ஜாக்கி ஷெராப்பின் ஸ்டில்களும் ரிலீசானது. அத்தோட சரி, ‘பாண்டிமுனி’யை எந்தப் பேய் அடிச்சுச்சோ, மோகினி அடிச்சுச்சோ, அந்தப் படத்தின் கதியும் அதோகதி தான்.
இப்ப கரண்ட் மேட்டர் என்னன்னா, “நான் எடுக்கப் போகும் படம் இந்திய சினிமாவையே கிறுகிறுக்க வைக்கப் போகுது” என வெட்டித் தம்பட்டம் அடித்துக் கொண்டு, படக்கம்பெனி என்ற பெயரில் சென்னை தி.நகரில் ஆபீஸ் போட்டு ‘களியாட்டம்’ நடத்தி வருகிறாராம் கஸ்தூரிராஜா. இந்தப் படத்திற்காக ரஜினியிடம் பெருந்தொகை கேட்டு, தனுஷ் மூலம் நெருக்கடி கொடுத்தும் பயனில்லாமல் போனதோடு
இந்த விவகாரம் தான், தனுஷ் -ஐஸ்வர்யா விவகாரத்து வரை போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.
சாந்தினியின் க்ளாமர் ஆட்டம்!
2010-ல் ரிலீசான கே.பாக்யராஜின் ‘சித்து +2’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சாந்தினி தமிழரசன். அதன் பின் பெரிதாக எந்தப் படமும் இல்லாததால் டி.வி. சீரியல் பக்கம் ஒதுங்கினார், அதன்பின்
சில தெலுங்குப் படங்களில் தலைகாட்டினார். சில ஆண்டுகளுக்கு முன்பு டான்ஸ் மாஸ்டர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இப்போது சினிமா சான்ஸும் இல்லை, சீரியல் சான்ஸும் இல்லாததால் வெப் சீரிஸ் பக்கம் ஒதுங்கிவிட்டார். கல்யாணம் ஆனாலும் க்ளாமர் ஆட்டத்திற்கு ‘ஐ ஆம் ரெடி’ என்ற முடிவுடன் தனது பி.ஆர்.ஓ. சதிஷ் மூலம் வாரம் இரண்டு போட்டோஷூட் ஸ்டில்களை ரிலீஸ் பண்ணி வருகிறார் சாந்தினி.
‘அறம்’ ராஜாவின் தில்லாலங்கடி ஆட்டம்!
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ‘அறம் மக்கள் நலச்சங்கம்’ என்ற அகாசுகா அமைப்பை நடத்தி வருபவர் ராஜா. இந்த ‘அ.ம.ந.வில் கோடிக்கணக்கான(??!!) உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லி மூன்று வருடங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் ஐக்கியமானார் இந்த ராஜா. பா.ஜ.க.வில் சேர்ந்துட்டா, அடுத்து சினிமா தான் தயாரிக்கணும் என்ற ஃபார்முலாப்படி கோலிவுட்டிலும் எண்ட்ரியானார் ராஜா. இந்த ராஜாவிடம் இருக்கும் கஜானா நிலவரத்தை எப்படியோ தெரிந்து கொண்ட கவிஞர் பா.விஜய் ஒரே அமுக்காக அமுக்கி, அர்ஜுன்-ஜீவா காம்பினேஷனில் ‘மேதாவி’ என்ற படத்தை டைரக்ட் பண்ணப் போவதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பூஜை போட்டார். அந்தப்படம் என்னாச்சோ, ஏதாச்சோ?
‘மேதாவி’யை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே, அதாவது எடப்பாடி முதல்வராக இருந்த போது சற்குணம் டைரக்ஷனில் விமல் ஹீரோ வேசம் போட ‘எங்க பாட்டன் சொத்து’ (சுருக்கமா இ.பி.எஸ். சாம்) என்ற படத்தை ஆரம்பித்தார் ‘அறம்’ ராஜா. படத்தை சற்குணம் முடித்துக் கொடுத்து மூன்று வருடங்களாகிவிட்டன. ஹீரோ விமலுக்கு சினிமா ஏரியாவில் இருக்கும் 12 கோடி கடனை அடைக்காமல், அவரது எந்தப் படமும் ரிலீசாகுது. இதுவும் போக ‘அறம்’ ராஜாவின் கஜானாவும் கரைந்துவிட்டது போல் சீன் போட்ட ‘மேதாவி’யும் போச்சு, ‘இ.பி.எஸ்.’சும் போச்சு
-மதுரையான்