கிருஷ்ணகிரி டோல்கேட்டை எந்த வண்டியும் தாண்டமுடியாது…
கிருஷ்ணகிரி டோல்கேட்டை எந்த வண்டியும் தாண்டமுடியாது…
திமுக அமைப்புச் செயலாளருக்கு புகார் அனுப்பிய அஸ்லம் குறித்து ஏற்கனவே நமது ‘அங்குசம் செய்தி’ இதழில் ‘திமுக பிரமுகருக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். நடக்க இருக்கும் உட்கட்சி மாவட்டத் தலைவர் தேர்தலை கணக்கில் கொண்டே செங்குட்டுவனுக்கு எதிராக இந்த புகாரை அஸ்லாம் அனுப்பியுள்ளான் என கூறும் திமுகவினர் இதே செங்குட்டுவனுக்காக பல்வேறு ‘வேலைகளை’ அஸ்லம் செய்துள்ளான் என்றும் கூறுகின்றனர். அஸ்லமின் இரண்டாவது மனைவி ஒரு போலீஸ் எஸ்.ஐ. மனைவி மூலம் உயர்அதிகாரிகள் வரை தொடர்பு வைத்துள்ள அஸ்லம் போலீஸாரின் கொடுக்கல் வாங்கலுக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறான்.
‘கிருஷ்ணகிரி டோல்கேட்டில் இவனை கடந்து எந்த வண்டியும் போகாது. சரியாக வசூலித்து உயரஅதிகாரிகளுக்கு பங்கு வழங்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறான் எனக் கூறும் கிருஷ்ணகிரி மாவட்ட உ.பி.க்கள், இவனுக்கு பிடித்தமான ஒரு நபரை மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற அஜண்டா தான் செங்குட்டுவனை காவு வாங்குகிறது’ என்கின்றனர்.