நேரு தொகுதியில் மகேஷ் பொய்யாமொழி பங்களா!
நேரு தொகுதியில் மகேஷ் பொய்யாமொழி பங்களா!
திருச்சி, திருவரம்பூரைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆரம்பத்தில், திருச்சி மாநகர தொகுதிகளில் சீட் கேட்டு கிடைக்காமல் போகவே திருவரம்பூரில் நின்றார். பின்னர் திருச்சி மாநகரில் உள்ள கிராப்பட்டியில் குடியேறினார். என்றாலும் மறுபடியும் அவருக்கு திருச்சி மாநகரில் உள்ள தொகுதியில் சீட் வழங்கப்படாமல் போகவே மறுபடியும் திருவரம்பூரிலேயே போட்டியிட்டு வென்றார்.
தற்போது அமைச்சர் கே.என்.நேருவின் கோட்டையான திருச்சி மேற்கு தொகுதியி லேயே பிரம்மாண்டமாக வீடு கட்டி கிரகப் பிரவேஷமும் நடத்திவிட்டாராம் அன்பில் மகேஷ். அந்த பங்களாவின் கிரகப்பிரவேஷத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு குறைவானவர்கள் தானாம்.