அடம்பிடித்த ஆணையர் – சஸ்பெண்ட் செய்த நிர்வாகம் – அங்குசம் செய்தி எதிரொலி
அடம்பிடித்த ஆணையர் – சஸ்பெண்ட் செய்த நிர்வாகம் – அங்குசம் செய்தி எதிரொலி
பெரம்பலூர் நகராட்சி ஆணையராக இருந்த குமரி மன்னனை சென்னை முனிசிபல் நிர்வாக இயக்குனர் ஐஏஎஸ் பொன்னையன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே20ம் தேதி தமிழகத்தில் உள்ள 16 நகராட்சி ஆணையர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இதில் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பார்கவி பெரம்பலூர் நகராட்சிக்கும், பெரம்பலூர் நகராட்சி ஆணையராக இருந்த குமரிமன்னன் வாலாஜாபேட்டைக்கும் இடமாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் குமரிமன்னனோ, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய திமுக பிரமுகர் மற்றும் முக்கியஸ்தர்களைப் பார்த்து கவனிக்க வேண்டியதை கவனித்து, ‘நான் பெரம்பலூரில் தான் இருப்பேன்.. இடம் மாறமாட்டேன்’ என்று உறுதியாக கூறிவிட்டாராம். குமரிமன்னனின் மீது நிர்வாக ரீதியாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலும் அவர் பணிமாறுதல் உத்தரவையும் மீறி அங்கேயே ‘டேரா’ போட அடுத்ததாக மேலும் ஒரு வைட்டமின் “பா” கொடுத்துவிட்டாராம்.
இந்நிலையில் கடந்த மே-30ம் தேதி மேலும் 16 நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் குமரிமன்னன் விவகாரம் மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது என அங்குசம் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அங்குசம் இதழில் செய்தி வெளியானவுடன் பெரம்பலூர் நகராட்சியில் இருந்து ரீலீவ் ஆகி வாலாஜாபேட்டைக்கும் செல்லாமல் சென்னையில் முகாமிட்டிருந்தார்..
இந்தநிலையில்.. சென்னை முனிசிபல் நிர்வாக இயக்குனர் பொன்னையன் சஸ்பெண்ட் செய்து அதில் பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் , வெளியூர் செல்வதாக இருந்தால் உரிய அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
அவரின் சம்பளம் உள்ளிட்ட படிகள் யாவும் பாதியாக குறைப்பாடுகிறது. என்றும் குறிப்பிட்டுள்ளார்.