திருச்சி கவுன்சிலர் அலுவலகம் எதிரே குடிநீர் தொட்டியா ? அல்லது பள்ளத்தாக்கா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் குடிநீர் தொட்டியா அல்லது பள்ளத்தாக்கா பீதியில் மக்கள்!

திருச்சியில் பிரதான பகுதியான உறையூர் 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள குடிநீர் தொட்டி பாதுகாப்பின்றி காணப்படுகின்றது.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

இது அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோருக்கும் பாதுகாப்பின்றி உள்ளது. மழை காலத்தில் இன்னும் சிரமமே. அந்த இந்த ரோடு முழுவதுமே தண்ணி நிரம்பி வழியும் அப்பொழுது ரோடு எது குடிநீர் தொட்டி எதுவென்று  தெரியாது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மழை காலங்களில் அந்த வழியாக செல்லும் போது வண்டியில் செல்பவர்கள் நடந்து செல்பவர்களும்  தொட்டிக்குள் விழுந்து பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும், உறையூர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றன இதனால் கூட்ட நெரிசலில் சிலநேரங்களில் இந்த இடத்தைக் கடக்கும்போது மக்கள் அச்சப்படுகின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இது நீர் தொட்டியா இல்லை பள்ளத்தாக்கா என்ற அளவு புலம்புகின்ற அளவுக்கு மக்கள் அச்சப்படுகின்றனர். தரமற்ற முறையில் கட்டியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கட்டிய நீர் தொட்டி எது ரோடு எது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் கொஞ்சம் உயர்த்தி கட்டியிருந்தால் சாலையில் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்று பொதுமக்கள் புலம்பித் தள்ளுகின்றனர்.

இதில்ஆச்சரியம் என்ன என்றால், இந்த குடிநீர் தொட்டி அமைந்திருப்பது திருச்சி உறையூர் 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துக்குமார் அலுவலகம் எதிரே தான்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது இதுவரை பொதுமக்கள் யாரும்  குறையை சொல்லவில்லை சொன்னால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

ரோட்டு ஓரத்தில் இப்படி ஒரு அபாயகரமான குடிநீர் தொட்டி இருப்பது ஆபத்து தானே ?  சொல்ல வேண்டியது நம் கடமை…

– பிரபு

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.