நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
டெல்லி வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து கருத்துக்களை தெரிவித்தார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்தபோது டெல்லியில் நடைபெற்ற வன்முறை கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் என கூறினார். மேலும் டெல்லி கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும் என்றும், இந்த வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மேலும் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் தன்னை பாஜகவின் ஆதரவாளர் என சில மூத்த பத்திரிகையாளர்களே கூறுவது வேதனை அளிப்பதாக கூறிய ரஜினிகாந்த், குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படும் என்ற நம்பிக்கை இல்லை என தெரிவித்தார். மேலும் மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம் எனவும், போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடக்கூடாது எனவும் கூறினார். மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.