சன் டிவி பற்றிய சுவாரசியமான தகவல்கள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

27 வருடங்களை நிறைவு செய்திருக்கும் சன் தொலைகாட்சிக்கு விஜய் தொலைக்காட்சி மற்றும் தமிழ் சேனல் 7 உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சன் டிவியை தொடங்கினார். இந்த சேனல் தொடங்கப்பட்டதில் இருந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்நிலையில், சன் டிவி 27 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனால் சன் டிவிக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

சன்டிவி உருவான வரலாறு

கருணாநிதியின் பேரனான கலாநிதி மாறன். சென்னை டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, லயோலா கல்லூரியில் பட்டப் படிப்புக்கு பிறகு, அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர். எம்பிஏ படித்து விட்டு, இந்தியா திரும்புகிறார். சில காலம், குங்குமம் இதழில் பணியாற்றுகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அப்போது வீடியோ மேகசின் என்ற புதிய உத்தியுடன் ந்யூஸ் ட்ராக் என்ற வீடியோ பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அதாவது நாட்டு நடப்புகளை விஷூவலாக காட்டி அச்செய்தியின் பின்னணியை வாய்ஸ் ஓவரில் சொல்லும் பாணியிலான பத்திரிகை அது.. அதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் மாறன்.

முதல் அறிமுகம் பூமாலை வீடியோ கேசட்

அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட். இதில் தற்போது, இந்த வார உலகம் என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகிறதல்லவா ? அதைப் போலவே, தொடங்கப் பட்டது.

ஆனால், இந்த பூமாலைக்குப் பின்னால், கருணாநிதியின் அரசியல் பலம் செயல்பட்டது. காரணம் இந்தியா டுடேவின் ந்யூஸ் ட்ராக் போல, சந்தாதாரர்கள் இல்லை. அதனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடியோ கடைகளும், மிரட்டப் பட்டு மாதந்தோறும் மாறனின் பூமாலை கேசட்டுகள் ஒவ்வொருவரும் மினிமம் 10 வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டன.  அதற்கு ஒப்புக் கொள்ளாத கடைகள் மீது புளூ ஃபிலிம் வைத்திருந்ததாக வழக்கு பாய்ந்தது.

அதே சமயம் பகீரத பிரயத்னம் செய்து சன்டிவி தொடங்கப்படுகிறது. ஆம் 1993ம் ஆண்டு சன் டிவி தொடங்கப் படுகிறது. இந்த சன் டிவி தொடங்கப் பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது.

ரபிபெர்னாட் மூலம் புருனே சுல்தான் உதவி

இப்போது போல, அப்போதெல்லாம், ட்ரான்ஸ்பாண்டர்கள் குறைந்த விலையில் கிடைக்காது. இப்போது ஜச்ட் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு டிவி சேனல் தொடங்கி விடலாம். அத்தனை மலிவாகி விட்டது. ஆனால் அப்போது அப்படி இல்லை.. வட இந்தியாவில் மட்டும் முளைத்து கொண்டிருந்த சாட்டிலைட் டி வி குறித்து அரை குறையாக அறிந்த நிலையில் தன் காலேஜ் மேட்-டான் ரஃபி ஃபெர்னார்ட் மூலம் இந்த தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்கிறார்..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரஃபி அப்போது வெளிநாடு ஒன்றில் கிறிஸ்துவ சேனல் ஒன்றின் ஆங்கராக இருந்தார். அவர் தொடர்பின் மூலம் 1993ல் சென்னையில் ப்ரூனே சுல்தானின் உறவினர் ஒருவரிடமிருந்த ட்ரான்ஸ்பாண்டரை இலவசமாக பெறுகிறார் கலாநிதி மாறன். இப்படித் தான் சன்டிவி தொடங்கப் பட்டது.

சன்டிவி தொடங்கிய உடனேயே பிரபலமாக ஆனதன் காரணம், அப்போது வேறு டிவி சேனல்கள் இல்லை என்றாலும் கூட, தரமான நிகழ்ச்சிகளை வழங்கியது ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆரம்பத்தில் மூன்றே மணி நேர நிகழ்சிகள்தான்.. அதுவும் ஒளிப்பரப்பாக வேண்டிய கேசட்டை 48 மணி நேரத்துக்கு முன்னால் வெளிநாட்டில் இருந்த டெலிகாஸ்ட் பாயிண்டுக்கு அனுப்ப வேண்டும். கிடைத்த நேரம் மற்றும் வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் கலா. சினிமா க்விச் என்ற பெயரிலும் ஜோடி பொருத்தம் என்ற பெயரிலும் பார்வையாளர்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்சிகளை சுவைபட வழங்குவதில் கவனம் செலுத்தினார்.

அதே சமயம் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், சேனலின் நம்பகத்தன்மையை போக்கும் வகையில் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப மாட்டேன் என்பதில், கலாநிதி பிடிவாதமாக இருந்தார். மற்ற சேனல்களில் வருவது போல், சன் டிவியில், டெலி ஷாப்பிங்கோ, சுவிசேஷக் கூட்டங்களோ, போலி மருத்துவர்களின் நேரடி நிகழ்ச்சியோ இடம் பெறாது. ஏனெனில், இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு முறை வந்தால் கூட, சேனலின் நம்பகத்தன்மை போய் விடும் என்று கலாநிதி நம்பினார்.

 அதே சமயம் டி டி மட்டுமே தமிழகத்தில் இருந்த நிலையில் புத்தம் புது திரைப்படங்கள் பலவற்றை தனக்கான மூன்று மணி நேரத்தில் போட்டு டி ஆர் பி-யை அதிகரித்த வண்ணம் இருந்தார். இதற்கு தூர்தர்சன் டி டி யாக இருந்த நடராஜன் என்பவர் பினாமி ரேஞ்சில் இருந்து சன் டிவி-யை வளரச் செய்தார் என்று சூடம் கொளுத்தி அணைத்து சொல்வோர் இன்றுமுண்டு

இதனிடையே 1991 முதல் 1996 வரியிலான ஜெயலலிதாவின் ஆட்சி, அராஜகம் மற்றும் ஊழலின் மொத்த உருவமாக இருந்ததால், மாற்று ஊடகத்தில் வரும் செய்திகளுக்கு மக்கள் ஏங்கினார்கள். இந்த ஏக்கத்தைப் பயன்படுத்தி, அன்றைய எதிர்க்கட்சி வேலையை சன்டிவி குழுமத்தினர் நன்றாகவே செய்தனர்.

தூர்தர்ஷன் செய்திகளுக்கு வேறு மாற்றே இல்லை என்பதால், மக்களும், இதை ரசிக்கவே செய்தார்கள். குறிப்பாக 1997 செப்டம்பர் 7 அன்று ஜெயலலிதாவின் விருப்பத்திற்குறிய வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம் வெகு விமர்சையாக இருந்தது. அப்போது சன் டிவி வழங்கிய செய்திகள், தனி கவனம் பிடித்தது. அந்த வளர்ப்பு மகன் திருமணத்திற்காக ட்ரான்ஸ்பார்மர்களிடமிருந்து மின்சாரம் திருடியது, அதிகாரிகளை மிரட்டியது, போன்ற அத்தனை விஷயங்களையும் படம் பிடித்துக் காட்டியது.

மேலும் வளர்ப்பு மகன் திருமணத்தின் போது, அந்த மணமகன் வரவேற்பு ஊர்வலத்தில், பட்டாடையுடன், ஜெயலலிதாவும், சசிகலாவும், உடல் முழுக்க நகை ஜொலிக்க நடந்து வந்ததையும், ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் எடுத்து வரும் வண்டியில் பாதுகாப்புக்காக வரும் துப்பாக்கி ஏந்திய காவலர் போல, அவர்களுக்குப் பாதுகாப்பாக, துப்பாக்கியோடு, அப்போது நடந்து வந்த வால்டர் தேவாரமும் நடந்து வந்த கண்கொள்ளா காட்சியை மலர் மருத்துவமனை மாடியிலிருந்து சன்டிவியின் இப்போதைய ஒரு இயக்குநராக இருக்கும் கண்ணன் என்பவர், படமெடுத்தார்.

மேலும் டிஜிபியாக இருந்த விஜயகுமார், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காகவே எஸ்எஸ்ஜி என்ற படையை உருவாக்கினார். அந்தப் படையைச் சேர்ந்தவர்கள், மலர் மருத்துவ மனையின் மாடியிலிருந்து படமெடுத்த கண்ணனை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கைது செய்தனர். அந்த கைது சன்டிவியின் பரபரப்பை பெருமளவில் அதிகரித்தது. இந்தக் கைதை பெரிய செய்தியாக்கிய சன் டிவி, இது தொடர்பாக ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவாண், ஆகியோருக்கு புகார் அனுப்பி தன் நேஷனல் இமேஜை பெருக்கிக் கொண்டது..

ஆனால் 1996 க்குப் பிறகு, மாறனின் அசல் முகம் தெரியத் தொடங்கியது. தாத்தா கருணாநிதி ஆட்சியைப் பிடித்தவுடன், சன் டிவி எடுக்கும், நெடுந்தொடர்களுக்கு திரைப்பட நடிக நடிகையரை மிரட்டுவதில் இருந்து, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு, தனியார் நிறுவனங்களை மிரட்டுவதில் தொடங்கி கேடி சகோதரர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. திமுக ஆட்சி என்பதால் தனியார் நிறுவனங் களும், திரைத் துறையின ரும், வாய் மூடி மவுனி களாக இருந்தனர். அறிவால சொத்துகளை அடமானம் வைத்து ஆரம்பித்து அறிவாலயத்தில் தனது அலுவலகத்தை வைத்திருந்த சன் டிவி, மெல்ல மெல்ல, அறிவாலயத்தையே தன் வசம் கொண்டு வந்தார்.

இதனிடையே, அந்த காலக்கட்டத்தில் இப்போது போல கேபிள் யுத்தம் பெரிதாக இல்லை. சேனல்களும் குறைவாக இருந்ததால், கேபிள் தொழில் அவ்வளவு போட்டி நிறைந்ததாக இல்லை. ஆனால், ஒரு ஆக்டோபஸ் போல கேபிள் தொழிலை கேடி சகோதரர்கள் வளைக்கத் தொடங்கினர். எஸ்.சி.வி என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்கியவர்கள் முதலில் சென்னை நகரில் மட்டும் கேபிள் விநியோகத்தை நடத்த ஆரம்பித்து தமிழகம் முழுக்கவும், கேபிள் தொழிலை, தன் கட்டுப் பாட்டில் வந்தார். மேலும் 2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது.

குறிப்பாக விஜய் டிவியில் முன்பு, ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து  தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விஜய் டிவிக்கு செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியை பறித்தார் தயாநிதி மாறன்.  அப்போது பறிக்கப் பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை.

இது மட்டுமல்லாமல், அப்போது ஓரளவு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக்காட்சியை செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற் காரணம், இப்போதைய ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி டாடா, அம்பானி, பிர்லா, பஜாஜ், போன்ற அத்தனை பெரிய நிறுவனங்களும், அரசாங்க விதிகளை வளைத்து, லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கின்றன என்றாலும், இந்த மாறன் மாதிரி மனசாட்சி இல்லாமால் வளர்ச்சி அடைந்தது யாருமில்லை..

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.