Sexual Grooming அப்டீன்னா என்ன?

0

சுருக்கமா சொன்னா, ஒருத்தர் தன்னோட பாலியல் வேட்கைய தணிச்சிக்கிற நோக்கத்தோட ஒரு குழந்தையை அணுகி நைசா சைசா பேசி அந்த குழந்தையோட ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமான உறவா மாறிட்டு, அதோட ரொம்ப நெருக்கமா உறவாடி, அப்பறம் அந்த குழந்தைய பாலியல் சுரண்டல் அல்லது sexual abuse பண்ணுறது தான் இந்த sexual grooming அப்டீன்னு சொல்லுவோம்.

இந்த ப்ராசஸ் ஒரே நாள்ள நடக்காது. நாள்கணக்குல மாசக்கணக்குல எடுத்துக்குவாங்க இப்டி ஒரு குழந்தைய groom பண்ணுறதுக்கு, அதாவது தன் நோக்கத்தை நிறைவேத்திக்க அந்த குழந்தைய mentally prepare பண்ணுறதுக்கு. இந்த ஆளோட நாம பாலுறவு வச்சிக்கிறது ரொம்ப நார்மலான ஒரு விஷயம் தான், தப்பு இல்லன்னு அந்த குழந்தைய நம்ப வைக்கிறது தான் இந்த செக்‌ஷுவல் க்ரூமிங்.

https://businesstrichy.com/the-royal-mahal/

இதுல அந்த குற்றவாளியோட முதல் படி என்னன்னா தனக்கு தேவைப்பட்ட குழந்தையை அணுகி அதோட நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு ஆளா மாறுறது. இதுக்கு அந்த குழந்தையோட boyfriend / girlfriend என்கிற உறவையோ, இல்லன்னா mentor என்கிற உறவையோ, அதுவும் இல்லன்னா அந்த குழந்தையோட பெற்றோரோட ஒரு close connection ஏற்படுத்திகிட்டு ஒரு powerful ஆளுங்கிற (பணம், பதவி குடுத்து ஏமாத்தி) உறவையோ, அல்லது அங்கிள் மாதிரியான ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமான ஆள் என்கிற உறவையோ ஏற்படுத்திகிட்டு அந்த குழந்தையோட ஒரு எமோஷனல் attachment உருவாக்கிக்குவாங்க.

ரெண்டாவது படி அந்த குழந்தைகிட்ட நைச்சியமா பேசி அதோட உணர்வுகளை காதல் என்கிற பேருலயோ இல்ல நட்பு என்கிற பேருலயோ exploit பண்ணுறது. அப்டி அந்த குழந்தையோட அந்தரங்க ரகசியங்கள தெரிஞ்சிக்கிறது. இதுல தன் மேல அந்த குழந்தைக்கு எந்தவிதத்துலயும் ஒரு எதிர்மறை எண்ணமோ சந்தேகமோ வராம பார்த்துக்குவாங்க. நம்மூர்ல நாடகக்காதல்னு எல்லாம் சொல்றோம்ல, அதே தான். இப்டி மெதுமெதுவா அந்த குழந்தை மேல ஒரு  power பண்ணிட்டு அதுக்கப்புறம் emotional blackmailing பண்ணி தன்கூட செக்ஸ்ல ஈடுபடவைக்கிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்த emotional blackmailing ரெண்டுவிதமா பண்ணுவாங்க. ஒண்ணு, “உனக்கு என்மேல உண்மையிலயே காதல் / அன்பு / பாசம் / நட்பு / நேசம் இருந்தா நீ என்னோட ஆசைக்கு இணங்குவ” அப்டீங்கிறது. அப்டி இணங்கலன்னா நான் உன்னை விட்டு விலகி போயிருவேன்னு மிரட்டுறது. ரெண்டு, “உன்னோட ரகசியங்கள எல்லாம் நீ என்கிட்ட பகிர்ந்திருக்க. நீ என் இச்சைக்கு இணங்கலன்னா அதை எல்லாம் நான் பப்ளிக்ல போட்டு உடைச்சிருவேன்” அப்டீன்னு பயமுறுத்துறது. இந்த ரெண்டுமே அந்த குழந்தையை மனசளவுல பலவீனப்படுத்தி குற்றவாளியோட நோக்கத்தை நிறைவேத்திக்க துணை செய்யும்.

அதுக்கப்புறம் கடைசி ஸ்டெப் என்னன்னா அந்த குழந்தையை ரகசியம் காக்க வைக்கிறது. நமக்குள்ள பாலுறவு நடந்ததை நீ வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது. அப்டியே சொன்னாலும் உன்னை தான் எல்லாரும் தப்பா நினைப்பாங்க. இல்லன்னா உன் குடும்பமே என்னை நல்லவன்னு நம்புறதால நீ நடந்தத வெளிய சொன்னாலும் யாரும் உன்னை நம்ப போறது இல்லன்னு மெரட்டி பணிய வைக்கிறது. நிறைய வேளைகள்ள அந்த குழந்தை இப்டிப்பட்ட குற்றவாளிகளோட மூளைச்சலவையில மயங்கி அவங்க சொல்லுறது செய்யிறது எல்லாமே சரின்னு நம்பிக்கிட்டு, அந்த தவறான உறவை விட்டு வெளிய வரமுடியாம சிக்கிகிட்டு இருப்பாங்க.

இங்க அந்த குழந்தையை குற்றவாளியோட பிடியில இருந்து விடுபட வைக்கிறது ரொம்ப கடினம். ரொம்ப ரொம்ப கவனமா செயல்படலன்னா அந்த குழந்தையோட total mental state பெரும் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கு. அதோட மொத்த ஆளுமையே கூட மாறிப்போகவும் சான்ஸ் இருக்கு. அதாவது அதுக்கப்புறம் அந்த குழந்தை மனப்பிரழ்வு நோயால பாதிக்கப்படவோ இல்லன்னா மொத்தமா தன்னை சுத்தி இருக்கிற சமூகத்துமேல நம்பிக்கை இழந்தோ (trust issues) போகலாம். யாரைப்பார்த்தாலும் இவங்க நம்மள ஏமாத்திருவாங்களோ, சுரண்டலுக்கு ஆளாக்கிருவாங்களோ என்கிற பயத்தோடயே இருக்கலாம்.

சோ முறையான professional counselling இருந்தா மட்டும் தான் அந்த குழந்தையால அப்டியொரு மோசமான உறவுல/ நிலைமையில இருந்து முழுசா விடுபட்டு வெளிய வந்து ஒரு நார்மல் லைஃபை வாழ தலைப்பட முடியும். இனி இது எல்லாமே, அதாவது இந்த sexual grooming என்கிறது, 18 வயசுக்கு உட்பட்ட, தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கிற உரிமையோ, பக்குவமோ, பகுத்தறிவோ இல்லாத குழந்தைகள் விஷயத்துல மட்டும் தான் apply ஆகும் (செல்லுபடியாகும்) என்கிறது கூடுதல் தகவல்.

ஒரு பகுத்தறிவுள்ள சமுகத்துல 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையோ ஆண்களையோ மூளைச்சலவை பண்ணி காதல்ல விழவைக்கிறதோ இல்லன்னா காமம் பகிர வைக்கிறதோ முடியாத விஷயம். ஏன்னா அவங்களுக்கு அந்த வயசுக்கு மேல ஒரு நாட்டை ஆட்சி செய்யிறது யாரா இருக்கணும்னு தேர்வு செய்யும் உரிமையும் பக்குவமும் இருக்குன்னு சட்டமே சொல்லுறப்போ, தன்கூட பாலுறவுல ஈடுபடுறது யாரா இருக்கணும் என்கிறதையும் தீர்மானிக்கிற பக்குவமும் இருக்கும் என்கிறது தான் லாஜிக்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அப்டியும் ஒரு நாட்டுல / சமூகத்துல 18 வயசுக்கு மேற்பட்ட பெண்கள்கிட்ட sexual grooming நடக்குதுன்னு குற்றச்சாட்டு எழுது அப்டீன்னா அந்த சமூகமும் அந்த பெண்களோட பெற்றோரும் தான் குற்றவாளிகளா இருக்கமுடியும். ஏன்னா அந்த பெண்கள் பாலுறவு சுரண்டலுக்கு ஆளாகிறதுக்கு அவர்கள் இப்டிப்பட்ட விஷயங்கள பத்தின அறிவோட, பக்குவத்தோட, தெளிவோட வளர்க்கப்படாதது தான் ஒரே காரணமாயிருக்க முடியும்.

ஆகவே இணையத்துல வர்ற 18+ வயசான தமிழ் பெண்கள் கிட்ட sexual grooming நடக்குதுறதும், அவங்க பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுறதும் உண்மைன்னா மாற்றப்பட வேண்டியது அந்த தமிழ் சமூகத்தோட குழந்தை வளர்ப்பு முறையே அன்றி வேறில்லை. Young women should be equipped with the skillsets to identify, face and overcome such kinds situations.

 

பெண்கள பாலியல் சுரண்டல் பண்ணிருவாங்கன்னு பொத்தி பொத்தி பாதுகாக்குறத விட்டுட்டு அவங்களுக்கு அதை கண்டுகொள்கிற, எதிர்கொள்கிற, சமாளிச்சி வெளிவருகிற திறமையை/ பகுத்தறிவை புகட்டணும். இப்டி காதல்னு சொல்லி ஏமாத்தப்படுவீங்க, காமப்பகிர்வுக்கு நேரா தள்ளப்படுவீங்க, இதையெல்லாம் பக்குவத்தோட எப்டி சமாளிக்கணும், எதிர்கொள்ளணும், கடக்கணும், உங்கள நீங்களே எப்டி பாதுகாத்துக்கணும் என்கிறதை எல்லாம் வெளிப்படையா பேசி, சொல்லி குடுத்து வளர்த்தணும்.

இதுக்கு காதல்னா என்ன, அந்த உணர்வு எதனால ஏற்படுது, அந்த உணர்வு எப்டி இருக்கும்னு ஒரு தெளிவோட பெண்/ ஆண் குழந்தைகள் வளர்க்கப்படுறது ரொம்ப அவசியம். அதோட emotional exploitation அப்டீன்னா என்ன, பாலியல் உறவுன்னா என்ன, பாலுறவு சுரண்டல்னா என்ன அப்டீங்கிற தெளிவையும் அந்த பெண்கள்/ ஆண்கள்கிட்ட சின்ன வயசுலயே ஏற்படுத்துறது ரொம்ப அவசியம்.

காதல்னாவே செக்ஸ்னாவே ஒரு பாவச்செயல், பெருங்குற்றம்னு சொல்லி வளர்த்தா இந்த இயல்பான காதல் உணர்வு ஒரு பெண்ணோட/ ஆணோட மனசுல துளிர்விடுறப்போ அவங்க அந்த அழகான உணர்வை இழந்துர கூடாதுன்னு திருட்டுத்தனமா காதலிக்க தலைப்படுவாங்க. சுரண்டலுக்கு ஆளாவாங்க. தன் பெற்றோருக்கோ குடும்பத்துக்கோ தெரியாம இளம் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறது இந்த மாதிரி அறியாமை/ அடக்குமுறையான சூழல்ல தான்.

இதுவே தன் காதலுணர்வை/ காம உணர்வை பத்தி வெளிப்படையா பேசுற ஒரு சூழல் நம்ம சமூகத்துல இருந்துதுன்னா பெண்கள் தங்கள் காதலன்களை பத்தின விவரங்கள மறைக்கவேண்டிய தேவை ஏற்படாது. அப்ப நாடகக்காதல்களும் அரங்கேறாது. காதல்னு வந்துட்டாவே அது அந்த பெண்ணோட வீட்டுக்காரவுங்களுக்கும் தெரிஞ்சிரும் என்கிற பயம் இந்த ஸோ கால்ட் நாடகக் காதலன்கள் மனசுல இருக்கும். அப்ப அவன் அந்த பெண்ணை exploit பண்ணி பாலியல் சுரண்டல்ல ஈடுபட முயற்சிக்கமாட்டான்.

ஆக பாலியல் சுரண்டல் குற்றவாளிகளை உருவாக்குற தற்போதைய சமூக அமைப்பை முதல்ல மாத்துவோம். முறையான பாலியல் கல்வியை பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து வளர்ப்போம். காதல் / காமம் ஒரு இயல்பான மனித உணர்வு என்கிற தெளிவோடயும் பக்குவத்தோடயும் வாழ்க்கைய அனுபவிச்சி சந்தோஷமா வாழுற ஆரோக்கியமான ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவோம். பாலியல் சுரண்டல்களை ஒட்டுமொத்தமா ஒழிப்போமாக என கூறி அமர்கிறேன்.

ஆங் இனி சொல்லு, 25 to 60+  வயசுள்ள, சுயசிந்தனை, சுயமரியாதை, பக்குவம் மற்றும் பகுத்தறிவுள்ள பெண்கள் மட்டுமே உறுப்பினர்களா இருக்கிற அந்த பொம்பள க்ரூப்ல sexual grooming, அதன் விளைவா பாலியல் சுரண்டலோ நடக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கா?

அன்பில்,

Lulu Deva Jamla G

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.