திருச்சி மக்களைச் சுரண்டிய ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி

0

திருச்சி மக்களைச் சுரண்டிய ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி

திருச்சியில் முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு டிக்கெட் ஆன்லைனில் புக் மை ஷோ என்ற இணையதளத்திலும் மேலும் சில இடங்களிலும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டிக்கெட்டுகள் பிளாட்டினம் – ரூ.15000, டைமண்ட் – ரூ.10000, கோல்ட் – 5000, சில்வர் – 1500, பிரான்ஸ்- 500 க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில்திருச்சி சுற்றி உள்ள 10 மாவட்டங்களில் இருந்தும் 36,000 பேர். கலந்துகொண்டதாக வணிகர்கள் சங்க தலைவரும் இமைகள் என்டர்டைன்மென்ட் தலைவர் கோவிந்தராஜுலு, பங்குதாரர் கருணா ஆகியோர் தெரிவித்தனர்.இதை தவிர வெளி மாநிலத்தவர் சிலரும் கலந்து கொண்டனர்.
திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நடந்த
இசை கச்சேரியில் கார் பார்க்கிங் ரசீதை கொடுத்து டூ வீலர் பார்க்கிங்க்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்து அடாவடி செய்தனர்.
இது தவிர 300 மில்லி தண்ணீர் பாட்டில் விலை 50 ரூபாய்க்கும் இதர உணவு பொருட்களை 20 மடங்கு அதிகமான விலைக்கும் விற்பனை செய்தனர்.
இதற்கு முன்பு ஆர் ரஹ்மான் சென்னையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 16,000 பேர் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் நிகழ்ச்சி இருந்தாலும் குறிப்பிட்ட நான்கு பாடகர்களை மட்டுமே வைத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரர்கள் இருந்த அறம் மக்கள் நல சங்கத்தின் பெயரை வாசிக்கவில்லை என்று சங்கத்தை சார்ந்த ஆயிரக்கணக்கானோர்நிகழ்ச்சியில் இருந்து கோஷம் போட்டுக்கொண்டே வெளியேறினர்.
இதன் பின்பு இதை தெரிந்துகொண்டு பதறிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் அறம் நலச்சங்கத்தின் பெயரை மீண்டும் வாசித்தார்.

நகர் நல விரும்பிகளும், வர்த்தகம் என்ற பெயரில் திருச்சி மாநகர மக்களிடம் நித்தம் நித்தம் சுரண்டும் வியாபாரிகளின் பங்களிப்புடன் நடந்த கச்சேரியில் “ரசிகர்கள் திரு…திரு..”
முற்றிலும் வியாபார நோக்கத்துடனும் மக்களின் பணத்தை சுரண்டுவதுமே நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி இது.
இதற்காக போக்குவரத்து நெரிசலில் இருந்து மக்களை நெறி படுத்திய காவலர்களே நிகழ்ச்சியின் நாயகர்கள்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.