கொலை வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கொலை வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்.

Sri Kumaran Mini HAll Trichy

கும்பகோணம் அருகே நிலப் பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் உள்பட 7 பேரிடம் போலீசார் கைது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் விட்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மஞ்சுளா (திமுக) விட்டலூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

மனோகரனின் உறவினர் திருச்சியைச் சேர்ந்த அஞ்சம்மாள் என்பவரிடம் இருந்து இரண்டரை ஏக்கர் நிலத்தில் மனோகரன் தற்போது நெல் நடவு செய்திருந்தார். இந்நிலையில் அந்த நிலத்தை அஞ்சம்மாள், அதே ஊரைச் சேர்ந்த ரெமோ என்பவரிடம் விற்பனை செய்து விட்டார்.

Flats in Trichy for Sale

இந்நிலையில் நிலத்தை வாங்கிய ரெமோ இரு தினங்களுக்கு முன் அந்த நிலத்தில் அறுவடை செய்ய முயன்ற போது மனோகரன் தரப்பினருக்கும் ரெமோ தரப்பினருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இது குறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று ரெமோ தரப்பினர் நாகை மாவட்டம், மூலங்குடியைச் சேர்ந்த காளிமுத்துவிடம் (53) அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து அறுவடை செய்ய முயன்ற போது சாகுபடி செய்திருந்த மனோகரன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மனோகரன் தரப்பினர் அறுவடை எந்திரத்தின் உரிமையாளர் காளிமுத்துவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த காளிமுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்,

இதையடுத்து திருநீலக்குடி காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, மனோகரன் (தி.மு.க.) உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். மனோகரன் கட்ட பஞ்சாயத்து போன்ற பல்வேறு ரவுடிசங்கள் அப்பகுதியில் செய்து வருவதாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்டோர்களின் உறவினர்கள்.

இந்நிலையில் அறுவடை எந்திரத்தை வாடகைக்கு எடுத்துச் சென்ற ரெமோ மற்றும் அவரது சகோதரரான காவலராக பணிபுரியும் பார்த்திபன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த காளிமுத்துவின் சகோதாரர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.