ரயில் மறியலால் ரணகளமான திருச்சி ஜங்ஷன்….!
ரயில் மறியலால் ரணகளமான திருச்சி ஜங்ஷன்….!
திருச்சி மாவட்டம் முடுக்குபட்டி பகுதியில் சுமார் 110 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை அகற்ற ரயில்வே நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்நிலையில் திருச்சி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று ரயில்வே இடத்தில் பல ஆண்டுகளாக வசிக்கும் முடுக்குபட்டி மக்களை அகற்ற முயன்ற ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்க முடிவானது. இந்நிலையில் அந்த கோரிக்கை மனுவை வாங்க ரயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டமும், ரயில் மறியலும் நடைபெற்றது. இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.