அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பதவியில் மூக்கை நுழைத்தார்களா ? பொன்னாரும் தமிழிசையும்?  கடு கடு முதல்வர் ! கப்சிப் போலீஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பதவியில் மூக்கை நுழைத்தார்களா ? பொன்னாரும் தமிழிசையும்?  கடு கடு முதல்வர் ! கப்சிப் போலீஸ் !

சமீபத்தில் நியமிக்கப்பட்ட தமிழக சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி பதவிக்கு சங்கர் ஐ.பி.எஸ். என்பவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை பிடிக்க நடந்த பின்புலத்தை நேரடியாக உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் கடும் அப்செட் ஆகிவிட்ட சம்பவம் காவல் துறை வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஏ.டி.ஜி.பி ரேஸ் குறித்து டி.ஜி.பி. அலுவலக சீனியர் அதிகாரிகளிடம் பேசினோம் ” காவல் துறையில் மாநிலத்தின் தலைமை அதிகாரியான டி.ஜி.பி பதவிக்கு அடுத்தபடியாக மிகவும் பவர்புல் போஸ்டிங் என கருதப்படும் ஏ.டி.ஜி.பி. சட்டம் – ஒழுங்கு பதவி. தமிழகத்தில் உள்ள 4 மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் ஒட்டு மொத்த காவல் நிலையங்களும் ஏ.டி.ஜி.பி. சட்டம் – ஒழுங்கு அதிகாரியின் நேரடி கட்டுப்பாட்டில் வரும்.

Davidson - IPS
Davidson – IPS

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இந்தப் பதவியில் தாமரைக்கண்ணன் என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த 30 ம் தேதி ஓய்வு பெற்றதை அடுத்து அந்த இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவியது. இந்த ரேஸில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி மகேஸ் குமார் அகவர்வால், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், ஏ.டி.ஜி.பி. அட்மின் சங்கர் ஆகியோர் ரேஸில் இருந்தனர்.

இந்த அதிகாரிகள் பலர் அவர்களுக்கு தெரிந்த அவர்களுடைய ஆதரவாளர்களை வைத்து ஏ.டி.ஜி.பி. சட்டம் – ஒழுங்கு பதவியை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். சந்தீப் ராய் ரத்தோர் அவருடைய டெல்லி சோர்ஸ்கள், மற்றும் திமுக குடும்ப உறுப்பினர்களை வைத்து மூவ் செய்தார். ஒரு கட்டத்தில் முதல்வராக பார்த்து போட்டால் போடட்டும் இல்லையென்றால் இப்போது இருக்கும் ஆவடி கமிஷனர் பதவியை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாகிவிட்டார்.

மகேஷ் குமார் அகர்வால் - IPS
மகேஷ் குமார் அகர்வால் – IPS

அடுத்தபடியாக மகேஸ் குமார் அகர்வால் டெல்லியிலுள்ள அவருடைய சோர்ஸ்கள் மூலமாக மூவ் செய்தார். டெல்லி சோர்ஸ்கள் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மகேஸ் குமார் அவர்வாலுக்கு எதிராக சில நோட்ஸ்களை அனுப்பி மகேஸ் குமார் அகர்வாலை காலி செய்தார்.

குறிப்பாக அவர் சென்னை கமிஷனராக இருந்த போது சி.சி.பி.யில் பல்வேறு பஞ்சாயத்துகள் செய்ததாகவும் அதன் மூலம் பல கோடிகள் ஆதாயம் அடைந்ததோடு, நகரில் ஒட்டு மொத்த காவல் நிலையங்களையும் அவருடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பணம் கொடுக்கல் வாங்கல், இடப் பஞ்சாயத்து , வீடுகளை காலி செய்வது, என எதையும் இன்ஸ்பெக்டர் முதல் டி.சி.வரை யாரும் செய்யக்கூடாது அதை சி.சி.பி. மட்டுமே செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆனால் அந்த உத்தரவு அவருக்குதான் கை கொடுத்தது மிகப்பெரிய பலனையும் கொடுத்தது. இதனால் பல்வேறு ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்போதும் அவர் மதுவிலக்கு பிரிவில் கல்லா கட்டுவதாக விரிவாக 5 பக்கங்களுக்கு முதல்வருக்கு நோட் அனுப்பி மகேஸ் குமார் அகர்வாலை காலி செய்தார்.

Shankar -IPS
Shankar -IPS

அடுத்தபடியாக சங்கர் எந்தவிதமான குற்றச் சாட்டுகளும் ஆளாகதவர் ஆனால் அதிமுக அனுதாபி என்கிற பேச்சு உள்ளது ஆகவே தாம்பரம் கமிஷனர் அமல் ராஜூவிற்கு சப்போர்ட் செய்தார். மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே உளவுத்துறையில் பல்வேறு குளறுபடிகள், ஓட்டைகள், சறுக்கல்கள், பிரச்னைகள், பாஜக தலைவர் அண்ணாமலையின் கடும் விமர்சனங்கள் இருந்த நிலையில் டேவிட்சனை மாற்ற முதல்வர் வீட்டில் ஆலோசனை நடந்தது. அந்த ஆலோசனையில் தாமரைக் கண்ணன் ஓய்வு பெற்றதும் அந்த இடத்திற்கு டேவிட்சனை நியமிக்க முடிவு செய்தனர். பிறகு டேவிட்சன் ஏ.டி.ஜி.பி. சட்டம் – ஒழுங்கு பதவிக்கு செல்ல விருப்பமில்லாமல் அங்கு அமல்ராஜை கொண்டு வர விரும்பி காய்களை நகர்த்தினார். இந்தப் பின்புலத்தில் இருவரும் ஒரே சாதி என்பதால் தனது சாதி நபர்கள் முக்கியப் பதவிக்கு கொண்டு வர மூவ் செய்தார்.

அமல் ராஜ் IPS
அமல் ராஜ் IPS

இந்த நிலையில் தான் முதல்வர் மருமகன் சபரீசனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார், மற்றும் ஆந்திர – பாண்டி ஆளுனர் தமிழிசை மூலமாக அமல்ராஜூவிற்கு தீவிரமாக சிபாரிசுகள் வந்ததாக கூறப்படுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க இந்த சிபாரிசுகள் நேரடியாக முதல்வருக்கே செல்ல அவர் கடும் கடுப்படைந்துள்ளார். நடப்பது நம்ம ஆட்சியா? இல்லை பி.ஜே.பி. ஆட்சியா? ஏன் இவங்க இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று அப்போது முதல்வரை சந்திக்க வந்த, அவருக்கு நெருக்கமான பத்திரிகை நண்பரிடம் தகவலை பகிர்ந்துள்ளதோடு, டென்ஷனும் ஆகியுள்ளார்.

இறுதியாக நவம்பர் 25 ம் தேதி ஏ.டி.ஜி.பி. சட்டம் – ஒழுங்கு பதவிக்கு இறுதி முடிவு எடுக்கும் பைல்கள் சென்றுள்ளது. அப்போது முதல்வர் ஏடிஜிபி அட்மின் சங்கர் பெயரை டிக் செய்யவே அதிர்ந்து போனார்கள்.

பொன்னரும் - ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன்
பொன்.ராதா கிருஷ்ணன் – ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன்

அப்போதும் அவர்கள் மாப்பிள்ளை சபரிசனிடம் ஒரு பிரமிக்கும் அளவுக்கு வைட்டமின் அளிப்பதாக பேச்சு வார்த்தை நடத்த மாப்பிள்ளையோ மாமாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் அவர் கடும் கோபம் அடைவார் என்று அந்த டீலை நிராகரித்துள்ளார்.  பிறகு இந்த தகவலும் முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளன. இப்படி எல்லாம் அதிகாரிகள் இருக்கிறார்களா ? என்று கடும் கோபமடைந்துள்ளார். இப்படித்தான் சங்கருக்கு ஏ.டி.ஜி.பி. சட்டம் – ஒழுங்கு பதவி கிடைத்தது.

தமிழகத்தில் ஒரே சாதியை சேர்ந்த சிலர் தொடர்ச்சியாக முக்கியமான பதவிகளுக்கு வருவதை அறிந்த முதல்வர் இது குறித்து ஆலோசனை மேற்கோண்டுள்ளார். மிக விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டப்பட இருக்கிறார் ” என்றார். காக்கியில் சாதி கறை படிவதை தடுக்க வேண்டும்.

 

– அஜித் குமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.