அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் – பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காயை நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில்  வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்இந்த நிலையில் தொடக்கத்தில் இருந்தே பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்புடன், தேங்காய்,  சலுகை விலையில் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பரிசுத்தொகுப்பில் தேங்காய்  வழங்க வலியுறுத்தியும், நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய்யை சலுகை விலையில் வழங்க வேண்டும், பள்ளிகளில் தேங்காய் எண்ணெய் மூலம் சமைத்த உணவுகளை கொடுத்திட வேண்டும், தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் தமிழக விவசயிகளிடமிருந்து தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் நாகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தேங்காய், வழங்க வலியுறுத்தியும் என முதல்வருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்பாஜகவினரின் ஆர்ப்பாட்டத்தையொட்டி காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.